கம்பராமாயணம் 8038 · யுத்த 17.267

Section யுத்த காண்டம் / 17. அதிகாயன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மலை குவட்டு இடி வீழ்ந்தென்ன, வளைகேளாடு ஆரம் ஏங்க,
முலைக் குவட்டு எற்றும் கையாள்; முழை திறந்தன்ன வாயாள்;
தலைக் குவட்டு அணைந்த செக்கர் சரிந்தன குழல்கள் தத்தி
உலைக் குவட்டு உருகும் செம்பு ஒத்து உதிரம் நீர் ஒழுகும் கண்ணாள்.

பொருள் · Meaning in Tamil

மலைக் குவட்டு இடி வீழ்ந்தென்ன - (ஏங்கி அரற்றி வந்த தானியமாலி) மலை உச்சியில் இடி விழுந்தது போல; வளைகளோடு ஆரம் ஏங்க - (கையில் அணிந்துள்ள) வளையல்களும் (கழுத்தில் அணிந்துள்ள) ஆரமும் ஒலிக்க; முலைக் குவட்டு எற்றும் கையாள் - முலையாகிய மலைமீது மோதுகிற கையை உடையவளாய்; முழை திறந்தன்ன வாயாள் - குகை திறந்தது போன்ற வாயை உடையவளாய்; தலைக்குவட்டு அணைந்த செக்கர் சரிந்தன - மேற்கு மலையில் பொருந்திய செவ்வானம் (கீழே) சரிந்தது போன்ற; குழல்கள் தத்தி - சிவந்த நிறமுடைய கூந்தல் அவிழ்ந்து பரவ; உலைக்கு - உலைக் களத்தின் கண்; வட்டு செம்பு உருகு ஒத்து - திரண்ட பொருளாய செம்பு உருகுவதை ஒத்து; உதிர நீர் ஒழுகும் கண்ணாள் - குருதி நீர் ஒழுகுகிற கண்களை உடையவள் ஆனாள்.

குவடு - உச்சி, ஆரம் - கழுத்தாரம், முழை - குகை, செக்கர் - செவ்வானம், தத்தி - பரந்து, உலைக்கு - உலைக்களத்தின் கண், வட்டு - திரண்ட பொருள், முலைக்குவடு உருவகம், உதிரநீர் - உருவகம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Like thunder crashing on a mountain peak, her bangles and necklace clashing,
  2. she beat her hands upon the peaks of her breasts; her mouth gaped like an opened cave;
  3. her red hair spilled loose like the sunset glow slipping down from the western peak;
  4. and her eyes streamed blood like copper melting in the forge.

What the poem says

A portrait of Tāṉiyamāli's frantic grief, drawn in images of mountains: she beats her breasts, which are called peaks, with a noise like thunder striking a summit. Her wide-open, wailing mouth is like a cave. Her red hair falls loose like the evening glow sinking behind the western hills. She weeps tears of blood, glowing like molten copper in a smith's furnace.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1malaik kuvaṭṭu iṭi vīḻnteṉṉa, vaḷaikaḷōṭu āram ēṅka,
mulaik kuvaṭṭu eṟṟum kaiyāḷ; muḻai tiṟantaṉṉa vāyāḷ;
talaik kuvaṭṭu aṇainta cekkar carintaṉa kuḻalkaḷ tatti
ulaik kuvaṭṭu uruku cempu ottu utira nīr oḻukum kaṇṇāḷ.