கம்பராமாயணம் 8039 · யுத்த 17.268
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அழக்கண்டும் அறிந்திலாதாள் - (இதுநாள்வரை பிறர்) அழுவதைப் பார்த்து இருந்தும் துன்பத்தை அறிந்திலாதவளாகிய தானியமாலி; மென்மைத் தோள் நிலத்தை மேவ - தன் மெல்லிய தோள்கள் நிலத்தைப் பொருந்த; அரக்கன் தாள் மேல் வீழ்ந்தனள் - அரக்கனாகிய இராவணனது கால்களின் மீது விழுந்து; போழ்ந்தனள் - வாயைத் திறந்து கொண்டு; பெரும் பாம்பு என்னப் புரண்டனள் - (பெரிய) மலைப் பாம்பு போல (நிலத்தில்) புரண்டு; பொருமிப் பொங்கி - மனத்தில் (துன்பப்) பொருமல் பொங்கி (வர); கொடியாய் - கொடியவனே; சூழ்ந்தனை என்னா - (எனக்குக் கேடு) செய்தனை என்று கூறித்; துடித்து - துடித்து; அருந்துயர வெள்ளத்து ஆழ்ந்தனள் - கடத்தற்கரிய துன்பமாகிய வெள்ளத்தில் ஆழ்ந்து; புலம்பலுற்றாள் - புலம்பத் தொடங்கினாள்.
அழக் கண்டும் - தேவர் முதலிய இராவணன் பகைவர் அழக் கண்டும் என்க. இவ்வாறு கொண்டால்தான், இலங்கையின் காட்சி கண்ட அனுமன் கூறிய,
"அளிக்கும் தேறல் உண்டு, ஆடுநர் பாடுநர் ஆகி களிக்கின்றார் அலால், கவல்கின்றார் ஒருவரைக் காணேன்
(கம்ப. 4864) என்ற பாடலோடு முரணாகாமை அறிந்து கொண்டதாக ஆகும் என்க. தான் அழாமையோடு பிறர் அழுவதைப் பார்த்தும் அறியாதவள் எனப் பொருள் கோடல் சிறப்பு. மேவுதல் - பொருந்துதல், போழ்தல் - பிளத்தல்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- She fell at the demon's feet, her soft shoulders pressed to the ground;
- she gaped and rolled like a great serpent, choking and seething,
- crying, 'Cruel one, you brought this about!', and writhing, she sank
- into a flood of grief and lamented, she who had seen others weep yet never known sorrow.
What the poem says
Tāṉiyamāli throws herself at Irāvaṇaṉ's feet and rolls on the floor like a python, blaming him for their son's death. She has watched others weep, the gods and Irāvaṇaṉ's enemies, but has never known grief herself.
The commentary links this to Aṉumaṉ's earlier survey of Ilaṅkai, when he saw nobody there in sorrow, only people drinking, dancing and singing. That earlier verse is quoted in the commentary.