கம்பராமாயணம் 8042 · யுத்த 17.271

Section யுத்த காண்டம் / 17. அதிகாயன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1‘அக்கன் உலந்தான்; அதிகாயன்தான் பட்டான்
மிக்க திறத்து உள்ளார்கள் எல்லோரும் வீடினார்;
மக்களின் இன்று உள்ளான் மண்டோதரி மகனே
திக்கு விசயம் இனி ஒருகால் செய்வாயோ?

பொருள் · Meaning in Tamil

அக்கன் உலந்தான் - (முன்பு அனுமனால்) அக்ககுமாரன் அழிந்தான்; அதிகாயன் தான்பட்டான் - (இப்போது) அதிகாயன் தானும் பட்டான்; மிக்க திறத்து உள்ளார்கள் - மிக்க வலிமை உடையவர்கள்; எல்லாரும் வீடினார் - எல்லோரும் அழிந்தார்கள்; மக்கள் இனி நின்று உளான் - மக்களில் இனி (உயிருடன்) நின்றிருப்பவன்; மண்டோதரி மகனே - மண்டோதரி மகனாகிய (இந்திர சித்தன்) மட்டுமே; திக்கு விசயம் இனி - திக்கு விசயத்தை இனி; ஒருகால் செய்யாயோ - ஒரு முறை செய்து வரமாட்டாயா?

மக்கள் துணையும் வீர உறவினர்துணையும் இழந்த நீ இனி ஒருமுறை திக்கு விசயம் செய்வது எவ்வாறு எனத் தானியமாலி வினவினள் என்க. "மக்கள் துணை அற்றனை (கம்ப. 8009) என்று இந்திரசித்தன் இராவணனை நோக்கிக் கூறுதலும் காண்க. உலத்தல் - அழிதல், திறம் - ஈண்டு வலிமை, வீடுதல் - அழிதல், திக்கு விசயம் - திசைதொறும் சென்று எதிர்த்தாரை வெல்லுதல், திக்கு விசயம் இனி ஒருகால் செய்யாயோ - நீயாவது திக்குவிசயம் செய்ய வரமாட்டாயோ என்று தன் மகனைக் கொன்றவரைப் பழிவாங்கத் தானியமாலி கூறுகிறாள் என்றும் கொள்ளலாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Akkaṉ is dead; Atikāyaṉ too has fallen;
  2. all those of surpassing strength have perished;
  3. of your sons, the only one left standing is Maṇṭōtari's son;
  4. will you not once more go out and conquer the directions?'

What the poem says

Tāṉiyamāli counts the losses. Akkaṉ, another of Irāvaṇaṉ's sons, was killed earlier by Aṉumaṉ, and now Atikāyaṉ and all the great warriors are gone. The only son left is Intiracittaṉ, the son of the chief queen Maṇṭōtari.

Her last line is scornful. Irāvaṇaṉ once marched in every direction conquering the world. Can he do it again with no sons or kinsmen left? It can also be read as a challenge to go out and avenge their son.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘akkaṉ ulantāṉ; atikāyaṉtāṉ paṭṭāṉ
mikka tiṟattu uḷḷārkaḷ ellārum vīṭiṉār;
makkaḷ iṉi niṉṟu uḷāṉ maṇṭōtari makaṉē
tikkuvicayam iṉi orukāl ceyvāyō?