கம்பராமாயணம் 8043 · யுத்த 17.272

Section யுத்த காண்டம் / 17. அதிகாயன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1 ”
பாட வேறுபாடு · Project Madurai reads
1‘ஏது ஐயா சிந்தித்து இருக்கின்றாய் ” எண் இறந்த
கோதை ஆர் வேல் அரக்கர் பட்டாரைக் கூவாயோ?
பேதை ஆய்க் காமம் பிடிப்பாய் பிழைப்பாயோ?
சீதையால் இன்ன வருவ சிலவேயோ?

பொருள் · Meaning in Tamil

ஐயா ஏது சிந்தித்து இருக்கின்றாய் - (இராவணன் மௌனியாய் இருத்தல் கண்டு) ஐயா எதைச் சிந்தித்துக் கொண்டு இருக்கின்றாய்; எண் இறந்த - எண்ணிக்கை கடந்த; கோதை ஆர் வேல் - மாலை பொருந்திய வேலை ஏந்திய; அரக்கர் பட்டாரைக் கூவாயோ - அரக்கர்களாகிய இறந்தவர்களை (உயிருடன் திரும்பிவரக்) கூப்பிடமாட்டாயோ?; பேதைஆய் - அறிவற்றுப்போய்க்; காமம் பிடிப்பாய் பிழைப்பாயோ - காமத்தைக் கைக்கொண்ட (நீ) உயிர் பிழைப்பாயோ?; இன்னும் - இன்னமும்; சீதையால்வருவ - சீதை காரணமாக வரும் துன்பங்கள்; சிலவேயோ - சிலதானோ (அன்று பல).

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'What, lord, are you sitting here brooding on? Will you not call back
  2. the countless demons with garlanded spears who have fallen?
  3. Turned fool and clinging to your lust, do you think you will survive?
  4. Are the sorrows still to come because of Cītai only a few?'

What the poem says

Irāvaṇaṉ stays silent, and Tāṉiyamāli turns on him. Can his brooding bring back the dead? Does he think he can live on while blinded by lust? She names the root cause outright: Cītai. The disasters that Cītai's captivity will bring, she warns, are far from over.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘ētu aiyā cintittu irukkiṉṟāy ” eṇ iṟanta
kōtai ār vēl arakkar paṭṭāraik kūvāyō?
pētai āyk kāmam piṭippāy piḻaippāyō?
cītaiyāl iṉṉam varuva cilavēyō?