கம்பராமாயணம் 8044 · யுத்த 17.273

Section யுத்த காண்டம் / 17. அதிகாயன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

உணர்வுடையான் உம்பி - அறிவு உடையவனாகிய உன் தம்பி (வீடணன்); சொன்ன உரை கேளாய் - கூறிய சொற்களைக் கேளாதவனாயும்; நம்பி குலக்கிழவன் கூறும் - ஆடவரிற் சிறந்த குலத்தலைவனாகிய மாலியவான் கூறிய; நலம் ஓராய் - (சொற்களின்) நன்மையை எண்ணாதவனாயும்; கும்பகருணனையும் கொல்வித்து - (இருந்து) கும்பகருணனைப் (பகைவர் கையால்) கொல்வித்து; என் கோமகனை - என் சிறந்த மகனாகிய அதிகாயனை; அம்புக்கு இரை ஆக்கி - (பகைவர்) அம்புக்கு இரையாகக் கொடுத்து; ஐய - ஐயனே; அரசு ஆண்டாய் - அரசு புரிந்தாய்.

நல்லுரை கேளாது பகைவரிடம் கும்பகருணனையும், அதிகாயனையும் பலி கொடுத்து அரசாள்வாய் என்றபடி. ஐய அரசு ஆண்டாய் - இகழ்ச்சி குறித்து அன்னிய உணர்வு தோன்ற வந்தது. உணர்வு - ஈண்டு அறிவு. உம்பி - ஈண்டு வீடணனைக் குறித்தது. குலக்கிழவன் - குலத்தலைவனாகிய மாலியவான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'You would not hear the words your wise younger brother spoke;
  2. you would not weigh the good counsel of the noble elder of our clan;
  3. you had even Kumpakaruṇaṉ killed, and made my princely son
  4. food for arrows; and so, my lord, you have ruled your kingdom!'

What the poem says

Tāṉiyamāli ends her lament with bitter sarcasm. Irāvaṇaṉ ignored the warnings of his wise brother Vīṭaṇaṉ and of the clan elder Māliyavāṉ. He sent his brother Kumpakaruṇaṉ to his death and now her son Atikāyaṉ. "What a fine way to rule!" is her verdict on his kingship.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘umpi uṇarvuṭaiyāṉ coṉṉa urai kēḷāy
nampi kulak kiḻavaṉ kūṟum nalam ōrāy;
kumpakaruṇaṉaiyum kolvittu eṉ kōmakaṉai
ampukku irai ākki āṇṭāy aracu aiya!