கம்பராமாயணம் 8047 · யுத்த 17.276
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பேர் இலங்கை - பெரிய இலங்கை மாநகரம்; தார் அகலத்து அண்ணல் - மாலையை மார்பில் அணிந்த தலைவனாகிய, தாசரதி - தசரத ராமன்; தனிக் கோயில் - ஒப்பற்ற தன் அரண்மனையிலிருந்து; பேர - (காடு நோக்கிச்) செல்ல; உலகு உற்றது உற்றதால் - உலகம் அடைந்த துன்பத்தை அடைந்தது; ஊர் அகலம் எல்லாம் - ஊர்ப்பரப்பு முழுவதும்; அரந்தை - தோன்றிய துன்பம் கலந்த; அழுத குரலோசை - அழுங்குரலோசை; உவா உற்ற - முழு மதி நாளில் தோன்றிய; ஆர்கலியே ஒத்தது - கடலின் ஓசையை ஒத்து விளங்கியது.
இலங்கை இராமன் காடேகிய போது உலகம் அடைந்த துன்பத்தை அடைந்தது. அங்குத் தோன்றிய அழுகுரலோசை முழு மதிநாளின் கடல் ஓசையை ஒத்திருந்தது. அகலம் - மார்பு, தாசரதி - தசரதன் மைந்தன், இராமன். கோயில் - அரண்மனை, அரந்தை - துன்பம், உவா - முழுமதி, ஆர்கலி - கடல்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Great Ilaṅkai suffered what the world had suffered
- when Tācarati, the lord with the garlanded chest, left his peerless palace;
- grief spread through the whole breadth of the city, and the sound of its weeping
- was like the ocean roaring on the day of the full moon.
What the poem says
This verse closes the episode of Atikāyaṉ's death. The poet compares the grief in Ilaṅkai to the grief of the whole world when Irāmaṉ, Tacarataṉ's son (Tācarati), left his palace for exile in the forest. The wailing of the city is like the ocean at full moon, when the tides run highest and the sea roars loudest. Comparing enemy grief to the grief over the hero's exile is a notable touch of sympathy.