கம்பராமாயணம் 8048 · யுத்த 18.1
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
இந்திரசித்து - இந்திரசித்தன்; கொலை வாட்கண் அரக்கியர் - கொல்லும் தன்மை அமைந்த வாளினைப் போன்ற கண்களை உடைய அரக்கியர்கள்; குழுமி - ஒன்று சேர்ந்து; கூந்தல் தாழ - கூந்தல் விரிந்து தொங்க; தழுவித் தலைப் பெய்து - (ஒருவரை ஒருவர்) கட்டிக்கொண்டு கூட்டமாக; தம்கை கொடு - தங்கள் கைகளைக் கொண்டு; மார்பின் எற்றி அழும் - மார்பில் அடித்துக் கொண்டு அழுகிற; இத்தொழில் யாது கொல் என்று - இந்தச் செயல் என்ன காரணமாகவோ என்று; ஓர் அயிர்ப்பும் உற்றான் - ஓர் ஐயத்தை (மனதில்) அடைந்து; எழிலித் தனி ஏறு என - மேகத்தின் இடையில் தோன்றும் ஒப்பில்லாத ஆணிடி போல; எழுந்தான் - எழுந்து வந்தான்.
அயிர்ப்பு - ஐயம். இந்திரசித் என்ற வடசொல்லுக்கு இந்திரனை வென்றவன் என்பது பொருள். இவன் இராவணனுக்கும், மண்டோதரிக்கும் பிறந்தவன். இவன் இயற்பெயர் மேகநாதன் என்பது. இராவணன் திக்குவிசயம் செய்த காலத்தில் சுவர்க்கத்தில் நடந்த போரில் அவனால் இந்திரனை வெல்ல முடியவில்லை. அப்போது மேகநாதன் மாயையால் மறைந்து போர் செய்து, அவனைக் கலக்கி, மாயைப் பாசத்தால் கட்டி இழுத்துப் போய் இலங்கைச் சிறையில் அடைத்து வைத்தான். அச்செயலை அறிந்த பிரமன் தேவர்கள் சூழ, இலங்கை வந்து இராவணனைப் பார்த்து, இந்திரனை வென்ற உன் மகனுக்கு இந்திரசித் எனப் பட்டம் வழக்கில் அமையட்டும் என்று கூறி இந்திரசித்தனுக்குப் பல வரமும் தந்து இந்திரனைச் சிறை வீடு செய்தான் என்பது புராணச் செய்தி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Thronging together, the demon women with deadly sword-like eyes, their hair hanging loose,
- clinging to one another in crowds, beating their breasts with their hands,
- are weeping: what is the cause of this?' Seized by a doubt,
- Intiracittaṉ rose like the peerless thunderbolt from among the clouds.
What the poem says
This verse opens the Nākapācap paṭalam, the episode of the serpent noose. Intiracittaṉ, Irāvaṇaṉ's eldest son and the demons' greatest warrior, hears the women of the city wailing and beating their breasts. Uneasy, he springs up like a thunderbolt bursting from a cloud.
His name means "conqueror of Indra". His birth name was Mēkanātaṉ, and he earned the title by defeating and capturing Indra, king of the gods, after which Brahmā freed Indra and gave the young demon many boons.