கம்பராமாயணம் 8049 · யுத்த 18.2
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
எட்டு ஆகிய திக்கையும் வென்றவன் - எட்டுத் திசைகளில் உள்ளார் யாவரையும் வென்றவனாகிய இராவணன்; இன்றும் - (முதல்நாள் போலவே) இன்றும் கூட, ஈடுபட்டான் கொல் - (தோற்று) பெருமை அழியப்பெற்றான் போலும்; அது அன்று எனின் - அது அல்ல என்றால்; பட்டு அழிந்தான் கொல் - (போர்க்களத்தில்) இறந்து அழிந்தான் போலும், பண்டு சுட்டான் - முன்பு இந்நகரைச் சுட்டெரித்தவனாகிய அனுமன்; இவ் அகன் பதியை - இந்த அகன்ற இலங்கை நகரத்தை; தொடு வேலையோடும் - (நகரத்துக்கு நீர் அரணாக உள்ள) சகரரால் தோண்டப் பட்ட கடலுடன்; கட்டான் கொல் - பேர்த்து விட்டான் போலும், இதற்கு ஒரு காரணம் என் கொல் - இவ்வாறு அரக்க மகளிர் புலம்பி அழுதற்கு உரிய ஒரு காரணம் எதுவாக இருக்குமோ? என்றான் - என்று பலபடி ஐயங்கொண்டு கூறினான்.
ஈடு - பெருமை, தொடுவேலை - கீழ்க்கடலின் வடக்குப் பகுதி சகரரால் தோண்டப்பட்டதால் கடலைச் சாகரம் என்றும் தொடு கடல் என்றும் வழங்குவது உண்டு.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Has he who conquered all eight directions suffered disgrace
- today too? If not that, has he fallen and perished? Or has the one who once
- burned this wide city now uprooted it, along with the dug-out sea?
- What can be the reason for this?' he said.
What the poem says
Intiracittaṉ guesses at the cause of the wailing. Has his father been shamed in battle again, as on the first day of fighting? Has he been killed? Or has Aṉumaṉ, who once set Ilaṅkai on fire, come back and torn up the whole city with its moat, the sea?
The ocean is called "dug" because legend says the sons of King Cakaraṉ (Sagara) excavated it. Hence its Sanskrit name sāgara.