கம்பராமாயணம் 8052 · யுத்த 18.5

Section யுத்த காண்டம் / 18. நாகபாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வில்லாளரை எண்ணின் - வில் வீரர்களை எண்ணினால்; முன்விரற்கு நிற்கும் வீரன் - முன் விரலில் நிற்கும் வீரனாகிய இந்திரசித்தன்; சொல்லாத முன்னம் - (தம்பியரின் இறப்பை இராவணன்) சொல்லுவதற்கு முன்னமேயே; சுடரைச் சுடர் தூண்டு கண்ணான் - தீயைக் கூட எரிக்கும் தன்மை வாய்ந்த கண்களை உடையவனாகி; பல்லால் அதரத்தை அதுக்கி - பற்களால் உதட்டைக் கடித்து; விண்மீது பார்த்தான் - வானத்தின் மேல் (அண்ணாந்து) பார்த்தான்; எல்லாரும் இறந்தனரோ - எல்லோரும் இறந்து விட்டார்களோ? என - என்று; ஏங்கி நைந்தான் - இரக்கம் கொண்டு வருந்தினான்.

வில்லாளரை எண்ணின் விரற்கு முன் நிற்கும் வீரன் - வில்லாளரில் முதல்வன் என்றபடி, விண்மீது பார்த்தான் - தன்னால் வெல்லப்பட்ட இந்திரனும் பிற தேவரும் சிரிப்பரே என்பதற்காக விண் பார்த்தான் என்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Before he had finished speaking, the hero whose eyes could set fire itself ablaze
  2. bit his lip with his teeth and looked up to the sky;
  3. 'Are they all dead?' he cried, and wasted away in grief,
  4. he who, when the bowmen are counted, stands at the very first finger.

What the poem says

Intiracittaṉ, who comes first whenever great archers are counted on the fingers, takes the news hard. His eyes blaze, he bites his lip, and he looks up at the heavens. The commentary explains that he looks up because he imagines Indra and the gods he once defeated laughing at the demons' disaster.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1collāta muṉṉam, cuṭaraic cuṭar tūṇṭu kaṇṇāṉ,
pallāl atarattai atukki, viṇmītu pārttāṉ;
ellārum iṟantaṉarō! ‘eṉa ēṅki naintāṉ;
villāḷarai eṇṇil viraṟku muṉ niṟkum vīraṉ