கம்பராமாயணம் 8053 · யுத்த 18.6

Section யுத்த காண்டம் / 18. நாகபாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1‘ஆர் கொன்றவர் ‘என்றலும் பேர் அதிகாயன் என்னும்
பேர் கொன்றவன் வென்றி இலக்குவன்; பின்பு நின்றார்
ஊர் கொன்றவனால், பிறரால் என உற்ற எல்லாம்,
தார் கொன்றையினான் கிரி சாய்த்தவன்தான் உரைத்தான்.

பொருள் · Meaning in Tamil

கொன்றவர் ஆர் என்றலும் - (ஏங்கி வருந்திய இந்திர சித்தன் இராவணனைப் பார்த்துக்) கொன்றவர் யாவர் என்று கேட்க; தார் கொன்றையினான் கிரி சாய்த்தவன்தான் - மார்பில் கொன்றை மாலை அணிந்த சிவபிரானுடைய (கைலாய) மலையைப் பெயர்த்துச் சாய்த்தவனாகிய இராவணன்; அதிகாயன் என்னும் பேர் கொன்றவன் - அதிகாயன் என்னும் பெயருடையவனைக் கொன்றவன்; வென்றி இலக்குவன் - வெற்றி பொருந்திய இலக்குவன்; பின்பு நின்றார் - பின்பு நின்றவர்களாகிய கும்பநிகும்பர் முதலியோர்; ஊர் கொன்றவனால் பிறரால் - (இலங்கை) ஊரைத் தீயிட்டு அழித்த அனுமனாலும் பிறராலும் (கொல்லப் பட்டனர்), என - என்று; உற்ற எல்லாம் - நடந்ததை எல்லாம்; உரைத்தான் - கூறினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When he asked, 'Who killed them?', 'The one who killed him named Atikāyaṉ
  2. is victorious Ilakkuvaṉ; those who stood after him fell
  3. to the one who burned the city and to others': all that had happened
  4. he told, he who had tilted the mountain of the god garlanded with koṉṟai.

What the poem says

Irāvaṇaṉ tells his son that Ilakkuvaṉ killed Atikāyaṉ, and that Aṉumaṉ, who once burned the city, and other monkey chiefs killed the rest. Irāvaṇaṉ is identified by one of his most famous deeds: he once tried to lift Kailāsa, the mountain of Śiva, who wears a garland of golden koṉṟai (laburnum) flowers.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘ār koṉṟavar ‘eṉṟalumē atikāyaṉ eṉṉum
pēr koṉṟavaṉ veṉṟi ilakkuvaṉ; piṉpu niṉṟār
ūr koṉṟavaṉāl, piṟarāl eṉa uṟṟa ellām,
tār koṉṟaiyiṉāṉ kiri cāyttavaṉtāṉ uraittāṉ.