கம்பராமாயணம் 8055 · யுத்த 18.8

Section யுத்த காண்டம் / 18. நாகபாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1‘அக்கப் பெயரோனை நிலத்தொடு அரைத்துளானை,
விக்கற்கு ஒரு வெவ் உரைத் தூதுவன் என்று விட்டாய்;
புக்கு அத் தலை எய்த நினைந்திலை; புந்தி இல்லாய்!
மக்கள் துணை அற்றனை; இற்றது உன் வாழ்க்கை மன்னோ!

பொருள் · Meaning in Tamil

அக்கப் பெயரோனை - அக்க குமாரன் என்ற பெயர் கொண்டவனை; நிலத்தொடு அரைத்துளானை - நிலத்தில் தேய்த்து அழித்தவனாகிய அனுமனை, (நான் பிரமக் கணையால் கட்டிக் கொண்டு வந்த போது கூட); விக்கல்பொரு - எச்சிலுக்குச் சமமான; வெவ் உரைத்தூதுவன் என்று - எதிரியின் விருப்பமான சொற்களைச் சொல்லுகிற தூதுவன் என்று சொல்லி; விட்டாய் - (கொல்லாது) விட்டு விட்டாய்; புக்கத் தலைப் பெய்தல் நினைந்திலை - (அவனை விட்டதால் நம் பக்கச் செய்திகள்) எதிர்ப் பக்கத்தில் புகுந்து நிறைதலை நினைத்தாய் இல்லை; புந்தி இல்லாய் - அறிவு அழிந்து போனவனே, மக்கள் துணை அற்றனை - (இப்போது நீ) மக்களின் துணையை இழந்து விட்டாய்; உன் வாழ்க்கை இற்றது மன்னோ - உன் வாழ்க்கை அழிந்து விட்டது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'The one who ground into the earth him who bore the name Akkaṉ
  2. you let go, calling him a messenger whose hot words are worth no more than spittle;
  3. you never thought of what would follow when he went back and joined the other side; witless one!
  4. you are left without the help of your sons; your life is finished!'

What the poem says

Intiracittaṉ reminds his father of an earlier mistake. When Aṉumaṉ killed Prince Akkaṉ and was brought to court bound by Intiracittaṉ's Brahmā-weapon, Irāvaṇaṉ spared him as a mere envoy. Aṉumaṉ then carried everything he had learned back to the enemy. Now, the son says bluntly, Irāvaṇaṉ has lost his sons and his life is as good as over.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘akkap peyarōṉai nilattoṭu araittuḷāṉai,
vikkal poru vev urait tūtuvaṉ eṉṟu viṭṭāy;
pukkat talaippeytal niṉaintilai; punti illāy!
makkaḷ tuṇai aṟṟaṉai; iṟṟatu uṉ vāḻkkai maṉṉō!