கம்பராமாயணம் 8056 · யுத்த 18.9
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
இன்று - இப்பொழுது; நினைந்தும் - (நடந்தவற்றை) நினைத்தும்; இயம்பியும் - (உன் மீது) குறை சொல்லியும், எண்ணியும் தான் என் - (பலவாறு பலவற்றை) எண்ணிப் பார்த்தும் தான் என்ன பயன்? கொன் நின்ற படைக்கலத்து எம்பியைக் - கொல்லும் தொழில் நின்ற படைக்கலங்களை ஏந்திய என் தம்பியாகிய அதிகாயனைக்; கொன்றுளானை - கொன்றுள்ளவனாகிய; அவன் யாக்கையை - அந்த இலக்குவனுடைய உடம்பை; அந்நின்ற நிலத்து - அவன் நின்ற போர்க்களத்தில்; நீக்கி அல்லால் - உயிர் பிரித்தல் இல்லாமல்; மன் நின்ற நகர்க்கு - நிலை பெறுந்தன்மை பொருந்தி நின்றுள்ள இலங்கை நகருக்கு; இனி வாரலென் - இனி வர மாட்டேன்; வாழ்வும் வேண்டேன் - (அதைச் செய்யாமல் போனால்) உயிர் வாழ்வும் விரும்பேன்.
இலக்குவனைக் கொன்றல்லது நகர்க்கு மீளேன். அவ்வாறு செய்யேனானால் உயிர் வாழேன் என்றவாறு. இது “இன்னது பிழைப்பின் இதுவாகியரெனக் கூறிய துன்னரும் துப்பின் வஞ்சினம்” என்க. (தொல். பொருள் 77)
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'What use is it now to brood, to talk, to weigh things over?
- Unless the one who killed my brother of the deadly weapons,
- on that very ground where he stood, I part from his body,
- I will not come back to this enduring city; nor do I wish to live.'
What the poem says
Intiracittaṉ breaks off his complaints and swears an oath. He will kill Ilakkuvaṉ on the battlefield where he killed Atikāyaṉ, or he will not return to Ilaṅkai and will not want to live. The commentary identifies this as a classic warrior's vow (vañciṉam) of the kind the old grammar Tolkāppiyam describes: "if I fail in this, let that befall me".