கம்பராமாயணம் 8059 · யுத்த 18.12
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
பாம்பின் தருவெம்படை - பாம்பு வடிவில் அமைந்த கொடிய படையினையும்; பாசு பதத்தினோடும் - பாசு பதப்படையினையும்; தேம்பல் பிறை சென்னி வைத்தான் - குறைந்த கலையுடைய பிறைச் சந்திரனைத் தலையில் அணிந்தவனாகிய சிவபிரான்; தரு தெய்வஏதி - தந்த தெய்வத்தன்மை பொருந்திய வாட்படையினையும்; ஓம்பித் திரிந்தேன் எனக்கு - பாதுகாத்துத் திரிந்தவன் ஆகிய எனக்கு, இன்று உதவாது போமேல் - (அவை) இன்று உதவாமல் போகுமானால், சோம்பித் துறப்பென் - (என் உயிரைச்) சோம்பல் அடைந்து விட்டு விடுவேன்; இனிச் சோறும் உவந்து வாழேன் - இனிமேல் சோற்றையும் விரும்பி வாழமாட்டேன்;
பாம்பின் தரு வெம்படை - நாக அத்திரம், பாசுபதம் - பசுபதி தொடர்புடையது. பாசுபத அத்திரம் என்க. தேம்பல் பிறை - குறைந்த கலையினை உடைய பிறை, ஏதி - வாள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'If the fierce weapon given by the serpent, together with the Pāśupata,
- and the divine blade given by him who wears the waning crescent on his head,
- which I have guarded and carried with me as I roamed, fail me today,
- I will give up my life in weariness; I will no longer live glad even of my food.'
What the poem says
Intiracittaṉ names his divine weapons: the serpent weapon (nāgāstra), the Pāśupata weapon of Śiva, and a sacred sword given by Śiva, who wears the crescent moon in his hair. If these fail him today, he will give up on life itself. The serpent weapon he mentions will be the turning point of this episode.