கம்பராமாயணம் 8060 · யுத்த 18.13

Section யுத்த காண்டம் / 18. நாகபாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மருந்தே நிகர் எம்பிதன் - சாவா மருந்தைப் போன்ற என் தம்பியாகிய அதிகாயன் தன்; ஆர் உயிர் வவ்வினானை - அரிய உயிரைக் கவர்ந்தவன் ஆகிய (இலக்குவனை); அந்தகற்கு விருந்தே என ஈகிலென் - யமனுக்கு விருந்து என்று கொடுக்காமல்; பொரும் தேவர் குழாம் நகை செய்திட - (என்னுடன்) போரிடும் (பகைவர்களான) தேவர்களின் கூட்டம் (எள்ளி) நகை செய்திட; வில்லும் ஏந்தி - வில்லையும் (கையில்) ஏந்தி, நான் - நான்; பாரின் போந்து இருந்தேன் எனின் - நிலத்தில் பொருந்தி இருந்தேன் என்றால்; அவ் இராவணி அல்லென் - அந்த இராவணனுடைய மகன் அல்லேன்; என்றான் - என்று (இந்திரசித்தன்) கூறினான்.

இராவணி - இராவணனுடைய மகன் இந்திரசித்து.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'The one who stole the precious life of my brother, who was like the nectar of immortality:
  2. if I do not give him as a feast to Death, but, still bearing my bow,
  3. come back while the hosts of gods I have fought laugh at me, and go on living
  4. upon the earth, then I am not that son of Irāvaṇaṉ,' he said.

What the poem says

His final vow. If he does not serve up Ilakkuvaṉ as a meal for Yama, god of death, and instead comes home with his bow while the gods jeer, then he is no true son of Irāvaṇaṉ. To him Atikāyaṉ was as precious as the nectar of immortality.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘maruntē nikar empitaṉ ār uyir vavviṉāṉai
viruntē eṉa antakaṟku īkileṉ, villum ēnti,
porum tēvar kuḻām nakaiceytiṭap pōntu, pāriṉ
iruntēṉ eṉiṉ, nāṉ av irāvaṇi alleṉ ‘eṉṟāṉ.