கம்பராமாயணம் 8061 · யுத்த 18.14

Section யுத்த காண்டம் / 18. நாகபாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஏகா - (இராவணன் இந்திரசித்தனைப் பார்த்து) நீ ஏகி; இது செய்து - (இலக்குவனைக் கொல்வதாகிய) இதனைச் செய்து; எனது இன்னலை நீக்கிடு - எனது துன்பத்தைப் போக்கி விடுக; எந்தைக்கு ஆகாதனவும் உளவோ - எந்தை போன்றவனாகிய (உன்னால்) செய்ய முடியாத செயல்களும் உள்ளனவா (இல்லை என்றபடி); இவ் இன்னலின் - (எனக்கு ஏற்பட்ட) மக்களை இழத்தலாகிய துன்பக்காலத்தில்; எனக்கு - எனக்காக; ஆற்றலார் மேல் - (நீ) பகைவர் மேல் சென்று; மாகால் வரி வெஞ்சிலை யோடும் - பெரிய தண்டினை உடைய கட்டமைந்த கொடிய வில்லோடு கூட; வளைத்தபோது - (அவர்களை) வளைத்த காலத்தில்; சேகு ஆகும் என்று எண்ணி - (அச்செயல் எனக்கு) உறுதியை உண்டாக்கும் என்று எண்ணிப் பார்த்து; சிந்தை செய்தேன் - (உன்னை அனுப்ப) மனதில் எண்ணினேன்.

இன்னல் - மக்களை இழந்தமையும், பகைவர் வென்றமையும், சீதையைப் பெறாமையுமாகிய இன்னல் என்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Go, do this, and lift my sorrow; for one like my father
  2. is there anything that cannot be done? For my sake, when upon the foe
  3. you close in with your cruel bow of mighty staff and banded grip,
  4. it will make me secure; that is what I thought, in this distress.'

What the poem says

Irāvaṇaṉ answers his son gently, without anger at his reproaches. He tells Intiracittaṉ to go and kill Ilakkuvaṉ and so relieve his grief. Nothing, he says, is beyond a son who is like a father to him. He had in fact been thinking that sending Intiracittaṉ with his great bow would be the safeguard he needs in this crisis. His distress, the commentary notes, is the loss of his sons, the enemy's victories and his failure to win Cītai.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘ēkā, itu ceytu, eṉatu iṉṉalai nīkkiṭu; entaikku
ākātaṉavum uḷavō? eṉakku āṟṟalārmēl
mā kāl vari veñ cilaiyōṭum vaḷaitta pōtu
cēku ākum eṉṟu eṇṇi iv iṉṉalil cintai ceytēṉ.