கம்பராமாயணம் 8062 · யுத்த 18.15

Section யுத்த காண்டம் / 18. நாகபாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1என்றானை வணங்கி, இலங்கு அயில் வாளும் ஆர்த்திட்டு,
ஒன்றானும் ஆறா, உருவா, உடற்காவலோடும்,
பொன் தாழ் கணையின் நெடும் புட்டில் புறத்து வீக்கி,
வன் தாள் வயிரச்சிலை வாங்கினன் வானை வென்றான்.

பொருள் · Meaning in Tamil

என்றானை - என்று கூறிய இராவணனை; வானை வென்றான் - வானுலகத்தில் உள்ளவர்களை வென்றவனாகிய இந்திரசித்தன்; வணங்கி - வணங்கி; ஒன்றானும் அறா உருவா உடற்காவலோடும் - ஒன்றினாலும் அறுக்கவோ (அ) ஊடுருவிச் செல்லவோ முடியாத கவசத்தோடு; இலங்கு அயில்வாளும் ஆர்த்திட்டு - ஒளி விளங்குகிற கூர்மையான வாளையும் (இடையில்) அணிந்து கொண்டு; பொன் தாழ் கணையின் நெடும் புட்டில் - பொன் போல் ஒளிவீசுவதும், உள்ளே ஆழ்ந்த வடிவம் கொண்டதுமான, பெரிய அம்பு அறாத் தூணிகளை; புறத்து வீக்கி - (தோள்களின்) புறத்தில் கட்டிக்கொண்டு; வன்தாள் வயிரச்சிலை வாங்கினன் - வலிய (இரு) முனைகளை உடைய உறுதியான வில்லை எடுத்துக் கொண்டான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Bowing to the one who had spoken so, he girded on his gleaming, sharp sword,
  2. and with body armour that nothing could cut or pierce,
  3. bound on his back the long quivers of gold-bright arrows,
  4. and took up his strong-tipped diamond bow, he who had conquered heaven.

What the poem says

Intiracittaṉ bows to his father and arms himself. He puts on armour that no weapon can cut or pierce and a shining sword. He ties on quivers that never run out of arrows and picks up his mighty bow. The following verses describe each piece of his war gear and its history.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṉṟāṉai vaṇaṅki, ilaṅku ayil vāḷum ārttiṭṭu,
oṉṟāṉum aṟā, uruvā, uṭaṟkāvalōṭum,
poṉ tāḻ kaṇaiyiṉ neṭum puṭṭil puṟattu vīkki,
vaṉ tāḷ vayirac cilai vāṅkiṉaṉ vāṉai veṉṟāṉ.