கம்பராமாயணம் 8063 · யுத்த 18.16

Section யுத்த காண்டம் / 18. நாகபாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அச்சிலை - (இந்திரசித்தன் கையில் கொண்டிருந்த) அந்த வில்லானது; மலர்க்கண் வந்தான் - (மாலின்) நாபித் தாமரையில் தோன்றியவன் ஆகிய பிரமன்; செயிர் ஒன்றும் உறாவகை - துன்பம் ஒன்றும் ஒரு சிறிதும் உண்டாகாமல்; இந்திரற்கு என்று - இந்திரனுக்கு என்று; வயிரந் நெடுமால் வரை கொண்டு செய்த - வலிமையான பெரிய வச்சிரமலையைக் கொண்டு செய்த; உயர் வெஞ்சிலை - சிறந்த கொடிய வில்லாகும்; பண்டு - முன்பு; அவன் தன்னை துயரின் தலை வைத்து ஓட்டி - அந்த இந்திரனைத் துன்பத்துக்கு உள்ளாக்கித் தோற்று ஓடச் செய்து; இவன் கொண்டது - இந்த இந்திரசித்தன் (பறித்துக்) கைக்கொண்டதாகும்; தோற்றம் ஈதால் - (இவ்வில்லின்) வரலாறு இதுவேயாகும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Made from the mighty, vast diamond mountain by him who came from the lotus,
  2. so that no harm at all should ever touch him, for Indra:
  3. that lofty, cruel bow; long ago this one put Indra to flight,
  4. cast him into misery, and took it; such was its origin.

What the poem says

The story of Intiracittaṉ's bow. Brahmā, who was born from the lotus growing from Viṣṇu's navel, made it from the adamantine Vajra mountain as a gift for Indra, to keep him safe from all harm. Intiracittaṉ defeated Indra, chased him from the field and took the bow as a trophy. So the bow made to protect the king of the gods now serves his conqueror.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vayiran neṭu māl varai koṇṭu, malarkkaṇ vantāṉ,
ceyir oṉṟum uṟā vakai, intiraṟku eṉṟu ceyta
uyar veñ cilai; ac cilai paṇṭu avaṉ taṉṉai ōṭṭi,
tuyariṉ talai vaittu, ivaṉ koṇṭatu; tōṟṟam ītāl.