கம்பராமாயணம் 8064 · யுத்த 18.17

Section யுத்த காண்டம் / 18. நாகபாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தோளில் கணைப்புட்டிலும் - (இந்திரசித்தன்) தோளில் கட்டியுள்ள அம்பு அறாத்தூணிகளும்; இந்திரன் தோற்ற நாளே - இந்திரன் தோற்றுத் தன்னிடம் சிறைப்பட்ட நாளில்; ஆளித்திறல் அன்னவன் கொண்டன - யாளியினைப் போன்ற வலிமையுடைய அத்தன்மையனான (இந்திரசித்தன்); கொண்டன - அவனிடம் பறித்துக் கொண்டவை ஆகும்; ஆழி ஏழும் மாள புனல் வற்றினும் - கடல்கள் ஏழும் இல்லை என்று கூறுமாறு (அவற்றின்) நீர் முழுதும் வற்றிவிட்டாலும், வாளி அறாத - (எடுக்க எடுக்க) அம்புகள் குறையாத, வன்கண் கூளி - கொடிய கண்களை யுடைய பேய்களுக்கும்; கொடுங்கூற்றினுக்கும் - கொடிய யமனுக்கும்; ஆவது ஓர் கூடு போல்வ - பிணங்களையும் உயிரையும் உணவாக்கித் தருகின்ற ஒரு கூண்டைப் போன்றுள்ளன.

கணைப்புட்டில் - அம்பு அறாத்தூணி. ஆளி - யாளி, சிங்கம் போன்ற உடலமைப்பும் துதிக்கையும் உள்ள ஒரு மிருகம். திறல் - வலிமை. ஏழுகடல்கள் - உப்புநீர், கருப்பஞ்சாறு, கள், நெய், பால், தயிர், நன்னீர் ஆகியவை நிறைந்த கடல்கள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The arrow quivers on his shoulders too, on the very day Indra was defeated,
  2. he of a yāḷi's strength took from him; though the seven seas
  3. should perish and their waters dry up, their arrows would never fail;
  4. they were like a store of food for the cruel-eyed ghouls and for cruel Death.

What the poem says

Intiracittaṉ's quivers were also taken from Indra on the day of his defeat. Their arrows never run out, even if the seven oceans should dry up. The poet calls them a pantry for the ghouls, who feed on corpses, and for Death, who feeds on lives.

The seven seas of Indian cosmology are of salt water, cane juice, wine, ghee, milk, curd and fresh water.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tōḷil kaṇaip puṭṭilum, intiraṉ tōṟṟa nāḷē
āḷit tiṟal aṉṉavaṉ koṇṭaṉa; āḻi ēḻum
māḷap puṉal vaṟṟiṉum vāḷi aṟāta; vaṉkaṇ
kūḷik koṭuṅ kūṟṟiṉukku āvatu ōr kūṭu pōlva.