கம்பராமாயணம் 8066 · யுத்த 18.19
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அவன் ஏறிய தெய்வ மாத்தேர் - அந்த இந்திர சித்தன் ஏறிய தெய்வத்தன்மை பொருந்திய பெரியதேர்; நூறாயிரம் யாளியின் நோன்மை தெரிந்த - நூறாயிரம் யாளிகளின் வலிமையைத் (தனித்தனியாகக்) கொண்ட; அன்னவை அவை ஆயிரம் ஏறாம் சீயத்து - அப்படிப்பட்ட தொகுதியாகிய ஆயிரம் ஆண்சிங்கங்கள்; பூண்டது என்ப - பூட்டப்பெற்றது; மாறாய் ஒர் இலங்கை நிகர்ப்பது - வேறாகிய ஓர் இலங்கையை ஒத்துள்ளது; வானுளோரும் தேறாதது - தேவர்களாலும் இத்தன்மையது என அறியப்படாதது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- With the strength of a hundred thousand yāḷis, lions,
- the males among them, a thousand such, were yoked to it, they say;
- it was like a second Ilaṅkai; even the gods of heaven
- could not fathom it, that great divine chariot he mounted.
What the poem says
Intiracittaṉ's chariot is drawn by a thousand lions, each with the strength of a hundred thousand yāḷis, the mythical lion-elephant beasts. It is so huge and splendid that it looks like a second Ilaṅkai, and even the gods cannot grasp its nature.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1nūṟāyiram yāḷiyiṉ nōṉmai terinta cīyattu
ēṟām avai aṉṉavai āyiram pūṇṭatu eṉpa;
māṟāy or ilaṅkai nikarppatu; vāṉuḷōrum
tēṟātatu maṟṟu avaṉ ēṟiya teyva māt tēr.