கம்பராமாயணம் 8067 · யுத்த 18.20
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
பொன் சென்று அறியா - (அத்தேர் நிறத்தினால்) பொன்னும் உவமை என்று கூறமுடியாத; உவணத் தனிப்புள்ளினுக்கும் - கருடன் என்னும் ஒப்பற்ற பறவைக்கும்; மின்சென்று அறியா மழுவாளன் விடைக்கும் - மின்னலும் ஒப்பாகச் சென்று அறியாத மழுப்படையைக் (கையில்) ஏந்திய சிவபிரானது இடபத்துக்கும், மேல்நாள் - முற்காலத்தில்; பின் சென்றது அல்லது - அவைகள் தோற்றுப் போய் முன்னால் ஓடியபோது அவற்றைத் துரத்திக் கொண்டு பின்னால் சென்றதே அல்லாமல்; ஒரு பெருஞ்சிறப்பு உற்ற போதும் - ஒப்பற்ற (தன் வலிமை துணை வலிமை) முதலிய பெருஞ் சிறப்பைப் பெற்ற காலத்தில் கூட; மூன்று உலகத்தினுள்ளும் - மூன்று உலகங்களிலும்; முன் சென்று அறியாதது - தோல்வி அடைதலால் அவைகள் பின்னால் துரத்தி வரத்தான்தோற்று முன்சென்று அறியாதது.
பொன் - பொன்வண்ணம், சென்று அறியா - நீங்காத, உவணன் - அழகிய சிறகுகளை உடையவன் என்று பொருள்படும். இவன் காசியபமுனிவரது மனைவியருள் விநதை என்பவளது மகன். சூரியனின் தேர்ப்பாகனான அருணனின் தம்பி. திருமாலின் வாகனமாய் இருப்பவன். இதனால் இவனுக்குப் பெரிய திருவடி என்று வைஷ்ணவ சம்பிரதாயத்தில் பெயர் உண்டு.
ஆங்கிலம் · English translationAI
Translation
- To the peerless bird Uvaṇaṉ, whose hue gold itself cannot match,
- and to the bull of the axe-bearer, which lightning cannot match, in days gone by,
- it only ever went behind; even when they stood at the height of their glory,
- it never once went before them, in all three worlds.
What the poem says
The chariot's war record. It has chased Garuḍa, called Uvaṇaṉ here, the golden bird that carries Viṣṇu, and Nandi, the bull ridden by axe-wielding Śiva. In every battle across the three worlds it has always been the pursuer and never once fled ahead of them. The commentary adds that Garuḍa is the son of the sage Kaśyapa and Vinatā, the younger brother of Aruṇa, the Sun's charioteer, and is called Periya Tiruvaṭi in Vaiṣṇava tradition.