கம்பராமாயணம் 8069 · யுத்த 18.22
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
செதுகைப் பெருந்தானவர் - (மேலும் அந்தத் தேர்) பொருதலைச் செய்த பெரிய அசுரர்களுடைய; ஊனொடும் தேய்த்த நேமியது - உடம்புகளைத் (தேய்த்து) அழித்த சக்கரங்களை உடையது; மதுகைத் தடந்தோள் வலி காட்டிய - வெற்றி பொருந்திய தன் பெருந்தோள் வலிமையைக் காட்டிப் போர் செய்த; வானவேந்தன் முதுகைத் தழும்பு ஆக்கியது - இந்திரனது முதுகில் தழும்பை உண்டாக்கிய; மொய் ஒளி மொட்டது - நிறைந்து ஒளியுடைய மொட்டு என்ற (தேர் உறுப்பை) உடையது; கைத்திசை யானையை ஓட்டியது என்னலாமோ அம்மா - (இத்துணை சிறப்புப் பெற்றிருப்பதால்) துதிக்கைகளை உடைய திசையானைகளை வென்று விரட்டியது என்று கூறுதல் (அதற்குச்) சிறப்போ?
வானவேந்தன் முதுகைத் தழும்பு ஆக்கல் - இராவணனால் வெல்லமுடியாத இந்திரனை இந்திரசித்தன் வென்று இலங்கைக்குக் கொண்டு போன போது, தேரின் மொட்டில் சேர்த்துக் கட்டிக்கொண்டு போனதால் ஏற்பட்ட தழும்பு குறித்தது. மொட்டு - தாமரை வடிவில் அமைந்து தேரின் முன்னால் பொருத்தப்படும் ஒரு தேருறுப்பு. இதனைக் “கொடிஞ்சி” என்ப.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Its wheels had ground down the flesh of the great warring Dāṉavas;
- can one call it praise to say it 'drove off the trunked elephants of the directions'?
- It bore the gleaming lotus-bud crest that left a scar upon the back
- of the king of heaven, who had shown the strength of his mighty shoulders!
What the poem says
More of the chariot's glories. Its wheels have crushed the bodies of the Dāṉavas, the warlike demons who fight the gods. To praise it merely for driving off the elephants that guard the eight directions would be to undersell it. At its front is a lotus-bud ornament, and when Intiracittaṉ carried the captive Indra back to Ilaṅkai tied to that ornament, it scarred Indra's back.