கம்பராமாயணம் 8072 · யுத்த 18.25
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
தூமக் கண் அரக்கனும் - புகை நிறக்கண்ணனான அரக்கனும்; தொல் அமர் யார்க்கும் தோலா மாபக்கனும் - (முன்பு நடந்த) பழைய போர்களில் எவருக்கும் தோல்வி அடையாத மாபக்கன் என்பவனும்; அந்நெடுந் தேர் ஆழிகாக்க - (இந்திரசித்தன் ஏறிச்சென்ற) அந்தப் பெரிய தேரின் அழகிய சக்கரத்தைக் காத்து நிற்க; தாமக்குடை மீது உயர - வெண்கொற்றக்குடை மேல் பொருந்திய விளங்க; பெருஞ் சங்கம் விம்ம - பெரிய சங்குகள் முழங்க; நாமக்கடல் பல்இயம் - அச்சத்தை உண்டாக்குகிற கடல் போல் மிகுந்த பல்வகை வாத்தியங்கள்; நாற்கடல் மேலும் ஆர்ப்ப - நான்கு கடல்களிலும் மிகுதியாகப் பேரொலி எழுப்பவும்; “சென்றனன்” என அடுத்த பாடலொடு தொடர்ந்து முடியும்.
தூமக்கண் அரக்கன் - தூமிராட்சன். மாபக்கன் - மகாபார்சுவன். தூமக்கண் அரக்கன் இராவணன் முதல் நாள் போரில் தோற்பதற்கு முன்பே அனுமனால் கொல்லப்பட்டவன் என்றும், மகாபார்சுவன் அதிகாயனுக்குத் துணையாகப் போய் ருசபன் என்னும் வானரனால் கொல்லப்பட்டவன் என்றும் முதல் நூல் கூறுவதாக வை. மு.கோ. குறித்துள்ளார் இவர்களில் தூமிராட்சன் இராவணனுக்கு மாமன் முறையினன் என்றும், மகாபார்சுவன் உடன் பிறந்தவன் முறையினன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கம்பர் முதல் நூலில் கூறப்பட்டுள்ளதை மாற்றி அவர்கள் இந்திரசித்தனுக்குத் துணையாகச் சென்றனர் என்று கூறுவதை எண்ணுக.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As the smoke-eyed demon and, never beaten by anyone in the wars of old,
- Māpakkaṉ guarded the jewelled wheels of that great chariot,
- as the garlanded parasol rose high above, as the great conches boomed,
- as many instruments, a dread sea of sound, roared even over the four oceans,
What the poem says
This verse runs straight into the next, whose verb, "he went", completes it. Two demon generals guard the wheels of Intiracittaṉ's chariot: the "smoke-eyed" Tūmirāṭcaṉ (Dhūmrākṣa) and Māpakkaṉ (Mahāpārśva). The royal parasol is raised above him, conches blow, and the din of the war bands rolls out across the four seas.
The commentary notes that Kampaṉ departs from Vālmīki here: in the Sanskrit epic both these demons have already been killed.