கம்பராமாயணம் 8075 · யுத்த 18.28
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வீரவெந்தொழிலினான் - வீரக் கொடுந்தொழிலை உடைய (இலக்குவன்); இவன் வருபவன் யார் - (இதோ இங்கு) வருகின்றவன் யார் என்று; (வீடணனைப் பார்த்து) இயம்புவாய் - சொல்லுவாய் என்று கேட்க; வீடணன் - (அதற்கு விடையாக) வீடணன்; ஆரிய - ஆடவரில் சிறந்தவனே; இவன் - வருகின்ற இவன்; இகல் அமரர் வேந்தனை - போர் ஆற்றல் மிக்க தேவர் தலைவனைப்; போர் கடந்தவன் - போரில் வஞ்சியாது எதிர் நின்று வென்றவன்; இன்று போர் வலிது என்றான் - இன்றைய போர் கடுமையானது என்று கூறினான்.
ஆரியன் - ஆடவர் திலகன், கடத்தல் - வஞ்சியாது எதிர் நின்று வெல்லல். ஆரிய - அண்மை விளி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Who is this who is coming? Tell me,'
- asked the one of fierce heroic deeds; and Vīṭaṇaṉ said,
- 'Noble one, this is he who in open battle overcame
- the warlike king of the gods; today the fighting will be hard.'
What the poem says
Seeing the huge force approach, Ilakkuvaṉ asks Vīṭaṇaṉ, Irāvaṇaṉ's brother who has come over to Irāmaṉ's side and knows the demon leaders, who this is. Vīṭaṇaṉ warns him that it is Intiracittaṉ, who beat Indra face to face, and that today's battle will be a hard one.