கம்பராமாயணம் 8076 · யுத்த 18.29
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
எம்பிரான் - எமக்குத் தலைவனே (என்று வீடணன் இலக்குவனை விளித்து); எண்ணியது ஒன்று - (நான்) எண்ணியதாகிய ஒன்றை; உணர்த்துவது உளது - உனக்குத் தெரிவிக்க வேண்டி உளது; கண் அகன் பெரும் படைத்தலைவர் காத்திட - (அது என்னவென்றால்) இடமகன்ற பெரிய படைக்குத் தலைவர்கள் (உனக்குத் துணையாகக்) காத்திட; நண்ணிய துணையொடும் - பொருந்திய துணைவர்களோடு; பொருதல் நன்று - (இந்த இந்திரசித்தனுடன்) போரிடுதல் நல்லது; இது - இக்கருத்தை; தெளியும் சிந்தையால் - ஆய்ந்து அறியும் மனத்தால்; திண்ணிதின் உணர்தியால் - உறுதியாக எண்ணிப் பார்ப்பாய்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'There is one thing I have thought of that I must tell you, my lord:
- with the leaders of our vast, wide-spread army guarding you,
- it is best to fight alongside the allies at hand; this
- weigh carefully, with a clear mind.'
What the poem says
Vīṭaṇaṉ gives Ilakkuvaṉ his advice. Do not face Intiracittaṉ alone, as you did Atikāyaṉ. Fight with the commanders of the monkey army around you to protect you. He asks Ilakkuvaṉ to think it over calmly.