கம்பராமாயணம் 8078 · யுத்த 18.31

Section யுத்த காண்டம் / 18. நாகபாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1‘பல் பதினாயிரம் தேவர் பக்கமா
எல்லை இல் சேனை கொண்டு எதிர்ந்த இந்திரன்
ஒல்லையின் உடைந்தனன் உயிர்கொண்டு உய்ந்துளான்
மல்லல் அம் தோளினாய்! அமிழ்தின் வன்மையால்.

பொருள் · Meaning in Tamil

மல்லல் அம் தோளினாய் - பெருமை மிகுந்த அழகிய தோள்களை உடையவனே; பல்பதினாயிரம் தேவர் - பல பதினாயிரக்கணக்கான தேவர்கள்; பக்கமா - பக்க பலமாக வர; எல்லையில் சேனை கொண்டு - அளவில்லாத படைகளைக் கொண்டு; எதிர்ந்த இந்திரன் - (இந்த இந்திரசித்தனை) எதிர்த்த இந்திரன்; அமுதின் வன்மையால் - அமுதம் உண்டதன் காரணமாக, ஒல்லையில் உடைந்தனன் - விரைவில் தோற்றவனாகியும் கூட; உயிர் கொண்டு உய்ந்துளான் - உயிரை விடாமல் கொண்டு தப்பிப் பிழைத்துள்ளான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'With many tens of thousands of gods at his side
  2. and an army beyond all limit, Indra faced him,
  3. was routed in a moment, and escaped with his life,
  4. O you of mighty, handsome shoulders, only by the power of the nectar.'

What the poem says

Vīṭaṇaṉ goes on describing Intiracittaṉ's power. When Indra, king of the gods, came against him with countless divine troops, he was crushed at once. He survived only because, like all the gods, he had drunk the nectar of immortality.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘pal patiṉāyiram tēvar pakkamā
ellai il cēṉai koṇṭu etirnta intiraṉ
ollaiyiṉ uṭaintaṉaṉ uyir koṇṭu uyntuḷāṉ
mallal am tōḷiṉāy! amutiṉ vaṉmaiyāl.