கம்பராமாயணம் 8079 · யுத்த 18.32
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
இந்திரன் புயப்பனிவரை உள - இந்திரனுடைய தோள்களாகிய பனிமலையில் (இமயமலையில்) உள்ள; நெடும் பாசப் பல்தழும்பு - (இவன் பிணித்ததால் ஏற்பட்ட) நீண்ட (மாயைக்) கயிற்றினால் உண்டான பல தழும்புகள்; இனி அவை மறையுமோ - இனிமேல் மறைந்து விடுமோ? அனுமனைப் பிணித்துளன் ஆனபோது - (அது மட்டும் அல்லாமல்) அனுமனையே பிரமனது கணையால் கட்டியவனாக இருக்கும் போது; இவன் - இந்த இந்திரசித்தனுடைய; தனுமறை வித்தகம் - வில்பயிற்சியின் திறமை; தடுக்கற் பாலதோ - (பகைவரால்) தடுத்தற்கு உரியதோ.
குழந்தையாய் இருக்கையில் இளஞ்சூரியனைக் கனிந்த பழம் என்று எண்ணிப் பிடிக்கப் பாய்ந்தபோது, இந்திரன் அவனைத் தன் வச்சிராயுதத்தால் அடிக்க அதனால் கன்னம் சிதைந்து அனுமன் என்னும் இப்பெயர் இந்திரனால் இடப்பட்டது என்பது கதைச் செய்தி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Will they ever fade now, on the snow-mountains of Indra's shoulders,
- the many long scars left by his noose? And since he
- has bound even Aṉumaṉ, can his mastery
- of the science of the bow be held in check?'
What the poem says
Indra's shoulders, white and vast as the snowy Himālaya, still carry the scars of the magic ropes with which Intiracittaṉ tied him up. This same warrior once bound Aṉumaṉ himself with Brahmā's weapon. Vīṭaṇaṉ asks who could withstand such archery.
The commentary adds the legend of how Aṉumaṉ got his name. As a baby he leapt at the rising sun, thinking it was a ripe fruit, and Indra struck him with the thunderbolt and broke his jaw (hanu).