கம்பராமாயணம் 8080 · யுத்த 18.33

Section யுத்த காண்டம் / 18. நாகபாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1என்று அவன் இறைஞ்சலும்; இளைய வள்ளலும்
‘நன்று ‘என மொழிதலும் நணுகினான் அரோ
வன் திறல் மாருதி ‘இலங்கைக் கோமகன்
சென்றனன் இளவல்மேல் ‘என்னும் சிந்தையான்.

பொருள் · Meaning in Tamil

என்று - என்று கூறி; அவன் இறைஞ்சினன் - அந்த வீடணன் வணங்கினான்; இளைய வள்ளலும் - இளைய வள்ளலாகிய இலக்குவனும், நன்று என மொழிதலும் - நல்லது என்று கூறிய உடனே; இலங்கைக் கோமகன் - இலங்கை அரசனாகிய இராவணனுடைய மகன்; இளவல் மேல் சென்றனன் என்னும் - இளவலாகிய இலக்குவன் மீது செல்லுகிறான் என்று எண்ணுகிற; சிந்தையான் - மனத்தினை உடையவனான; வன்திறல் மாருதி - மிகு வலி உடைய அனுமன்; நணுகினான் - (இலக்குவனை) நெருங்கி வந்தான். அரோ - அசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. So he spoke, and bowed; and as the generous younger prince
  2. said 'Good', there drew near
  3. mighty Māruti, with the thought in his mind,
  4. 'The prince of Ilaṅkai has gone out against the younger brother.'

What the poem says

Ilakkuvaṉ accepts Vīṭaṇaṉ's advice. At that moment Aṉumaṉ, who has realised that Intiracittaṉ is heading for Ilakkuvaṉ, arrives to stand by him. "Arō" at the end of the Tamil line is a metrical filler with no meaning.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṉṟu avaṉ iṟaiñciṉaṉ; iḷaiya vaḷḷalum
‘naṉṟu ‘eṉa moḻitalum naṇukiṉāṉ arō
vaṉ tiṟal māruti ‘ilaṅkaik kō makaṉ
ceṉṟaṉaṉ iḷavalmēl ‘eṉṉum cintaiyāṉ.