கம்பராமாயணம் 8081 · யுத்த 18.34

Section யுத்த காண்டம் / 18. நாகபாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கோத்து எழு - (போருக்கு உரிய படைக்கலங்களைக்) கோத்து எடுத்துக்கொண்டு எழுகின்ற; இராவணி - இராவணன் மகனாகிய இந்திரசித்தனது; தோற்றமும் துணிவும் நோக்குறா - தோற்றத்தையும் துணிவையும் பார்த்து; கூற்றமும் கட்புலம் புதைப்ப - (அனுமன் தன் விரைவு கண்டு) இயமனும் (அஞ்சிக்) கண்களை மூடிக்கொள்ளுமாறு; மேல்திசை வாயிலை விட்டு - (தான் இருந்த இலங்கையின்) மேற்குத் திசை வாயிலை விட்டு; வெங்கடுங்காற்று என - கொடிய வேகமான காற்றுப்போல; கடிதின் வந்து அணுகினன் - விரைந்து (இலக்குவனிடம்) வந்து சேர்ந்தான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. So swiftly that even Death covered his eyes, having seen the bearing
  2. and the resolve of Irāvaṇi as he rose, his weapons strung ready,
  3. he left the western gate
  4. and like a fierce, violent wind came rushing up beside him.

What the poem says

Aṉumaṉ had been fighting at the western gate of Ilaṅkai. When he sees Intiracittaṉ, called here Irāvaṇi, "son of Irāvaṇaṉ", setting out armed and determined, he leaves his post and races to Ilakkuvaṉ like a storm wind. He moves so fast and so fiercely that even Yama, god of death, shuts his eyes in fear.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kūṟṟamum kaṭpulam putaippa kōttu eḻu
tōṟṟamum irāvaṇi tuṇivum nōkkuṟā
mēl ticai vāyilai viṭṭu veṅ kaṭuṅ
kāṟṟu eṉa aṇukiṉāṉ kaṭitiṉ vantu arō.