கம்பராமாயணம் 8083 · யுத்த 18.36

Section யுத்த காண்டம் / 18. நாகபாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1இரு திரைப் பெருங் கடல் இரண்டு திக்கினும்
பொரு தொழில் வேட்டு எழுந்து ஆர்த்துப் பொங்கின
வருவன போன்றன மனத்தினால் சினம்
திருகின எதிர் எதிர் செல்லும் சேனையே.

பொருள் · Meaning in Tamil

மனத்தினால் சினம் திருகின - மனத்தில் சினம் முதிர்ந்தவையாகி; எதிர் எதிர் செல்லும் தானையே - எதிர் எதிராகச் செல்லும் (அரக்கர் படை, குரங்குப் படை என இருபக்கத்துப்) படைகளும்; பொருதொழில் வேட்டு - போர்த் தொழிலை விரும்பி; ஆர்த்துப் பொங்கின எழுந்து - பேரொலி செய்து பொங்கி எழுந்து; இரண்டு திக்கினும் - இரண்டு திசைகளில் இருந்தும்; இருதிரைப் பெருங்கடல் - பெரிய அலைகள் உடைய பெருங் கடல்கள் (இரண்டு); வருவன போல்வன - வருவனவற்றை ஒத்தன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Like two great seas with towering waves from two directions,
  2. rising, roaring, surging, eager for the work of battle,
  3. rolling in, so, their minds twisted with rage,
  4. the two armies advanced, face against face.

What the poem says

The two armies, demons and monkeys, charge at each other, shouting and furious. The poet likens them to two great oceans with huge waves rushing together from opposite sides.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1iru tiraip peruṅ kaṭal iraṇṭu tikkiṉum
poru toḻil vēṭṭu eḻuntu ārttup poṅkiṉa
varuvaṉa pōlvaṉa maṉattiṉāl ciṉam
tirukiṉa etir etir cellum cēṉaiyē.