கம்பராமாயணம் 8084 · யுத்த 18.37

Section யுத்த காண்டம் / 18. நாகபாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

இன்று - இன்றைக்கு, கருத்தினால் தெரிந்து எண்ணினால் - கவனமாக நினைத்து எண்ணினால்; கண்ணினால் - கண்களினாலும்; மனத்தினால் - மனத்தாலும்; பெறு பயன் எய்தும் எனா - பெறுகின்ற பயனை (நாம்) அடைவோம் என்று நினைத்துக் கொண்டு; இமையவர் - தேவர்கள்; நங்கைமாரொடும் - (தங்கள்) மனைவிமார்களுடன்; விண்ணின் நாடு உறைவிடம் - (தங்கள் வாழும் இடமாகிய) வானுலகம் ஆகிய உறைவிடம்; வெறுமை கூர - வெற்றிடமாக மிகும்படி; நண்ணினார் - (போர்க்களத்துக்கு மேல் வந்து) நெருங்கினார்கள்.

கண்ணினால் பெறுபயன் - அறமும் பாவமும் போரிட எதிர் எதிராக நிற்பதையும், அறத்தின் வலிமைக்கு முன் பாவம் தேய்ந்து அழிவதையும் காணலால் வரும் பயன். மனத்தினால் பெறுபயன் - எண்ணி அறியமுடியாத பாவச் சார்பாளரின் அழிவு தங்களது துயரைப் போக்கும் என எண்ணுவதால் வரும் மனமகிழ்ச்சி என்க. தங்களது அடிமை வாழ்வுக்கு விடிவு காலம் வந்து விட்டது என்று எண்ணி வானுலகத் தேவர் அனைவரும் போர் காண வந்துவிட்டதால், வானுலகம் வெற்றிடமாய் விட்டது என்றார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'The good that comes of seeing with the eye, of the mind, of thought,
  2. of careful reckoning, that we shall gain today,' they said,
  3. and the gods drew near, with their wives as well,
  4. so that their dwelling, the land of heaven, was left quite empty.

What the poem says

The gods and their wives crowd the sky above the battlefield, leaving heaven empty. They expect two rewards. With their eyes they will watch righteousness wear down sin. In their minds they will enjoy the hope that the fall of the sinful demons will end their own long slavery under Irāvaṇaṉ.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘kaṇṇiṉāl maṉattiṉāl karuttiṉāl terintu
eṇṇiṉāl peṟu payaṉ eytum iṉṟu ‘eṉā
naṇṇiṉār imaiyavar naṅkaimāroṭum
viṇṇiṉ nāṭu uṟaiviṭam veṟumai kūravē.