கம்பராமாயணம் 8088 · யுத்த 18.41

Section யுத்த காண்டம் / 18. நாகபாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

எழுத்தொடர் மரங்களால் - (குரங்கு வீரர்கள்) இரும்புத் தூண் போன்ற மரங்களால்; எற்ற - தாக்கியதால்; முற்றிய - உயிர் நீங்கியனவும்; விழுத்தலை முழுவதும் - சிறந்த தலைகள் முழுவதும்; சிதறி வீழ்ந்தன - சிதறி வீழ்ந்தனவும் ஆகிய; பெருஞ்சினத்து - மிக்க கோபத்தில்; அழுத்திய - ஆழங்காற்பட்ட; அரக்கர் ஆக்கைகள் - அரக்கரது உடம்புகள்; கழுத்து உள - கழுத்து உள்ளனவும்; தலை இல - தலை இல்லாதனவுமாய்; களத்தின் ஆடுவ - போர்க்களத்தில் (கவந்தங்களாய்) நின்று ஆடுவன.

வானரரின் தாக்குதலால் அரக்கர் அழிந்தமை கூறப்பட்டது. எழுத்தொடர் மரங்கள் - இரும்புத் தூண் போன்ற மரங்கள், முற்றுதல் - உயிர் அழிதல், எழு - வளைதடிகள், தொடர் - இரும்புச் சங்கிலி எனலும் ஆம். களத்தின் ஆடுவ - கவந்தமாடல் என்க. தொடர் - உவம உருபு எனினுமாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Struck down by trees like iron bars, the doomed demons'
  2. proud heads were all scattered and fell;
  3. and the bodies of the demons, sunk deep in their great fury,
  4. with necks but no heads, went on dancing upon the field.

What the poem says

The monkeys club the demons with trees as heavy as iron bars and knock off their heads. In a grim image common in Indian war poetry, the headless trunks (kavantam) of the demons, still full of rage, keep moving on the field as though dancing.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eḻut toṭar maraṅkaḷāl eṟṟa muṟṟiya
viḻut talai muḻuvatum citaṟi vīḻntaṉa
aḻuttiya peruñ ciṉattu arakkar ākkaikaḷ
kaḻuttu uḷa talai ila kaḷattiṉ āṭuva.