கம்பராமாயணம் 8089 · யுத்த 18.42
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வெட்டிய தலையன - (குரங்குகள் அரக்கரால்) வெட்டப்பட்ட தலைகளை உடையனவாயும்; நரம்பு வீச - நரம்புகள் (அறுபட்டு மேல்) வீசுவதனால்; முட்டிய குருதிய - மேலே பாய்கிற உதிரத்தை உடையனவாயும்; குரங்கின் மொய் உடல் - (உள்ள) குரங்குகளின் வலிமையான உடம்புகள்; சுட்டு உயர் நெடுவனம் தொலைந்தபின் - ஓங்கி உயர்ந்த பெரிய காடு (நெருப்பால்) அழிந்த பிறகு; நெடுங் கட்டைகள் எரிவன போன்று - பெரிய கட்டைகள் எரிவன போல; காட்டுவ - தோன்றுவன.
தலையறுபட்ட குரங்கு உடல் - மேல்பகுதி வெந்து அழிந்த மரத்தின் அடிக்கட்டை. கழுத்தில் இருந்து வெளிப்படும் குருதி - தீ என்க. இப்பாடலால் குரங்குப் படையின் அழிவு கூறப்பட்டது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- With their heads hacked off, sinews lashing about, blood
- spurting upward, the stout bodies of the monkeys
- looked like the tall stumps that go on burning
- after a lofty, great forest has been burnt away.
What the poem says
Now the monkeys' losses. Beheaded monkey bodies stand on the field with blood jetting from their necks. They look like the charred stumps left after a forest fire, still burning, with the red blood as the fire.