கம்பராமாயணம் 809 · பால 13.5

Section பால காண்டம் / 13. எழுச்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வெற்றி வேல் மன்னவன்' தக்கன் வேள்வியில்
கற்றை வார் சடை முடிக் கணிச்சி வானவன்
முற்ற ஏழ் உலகையும் வென்ற மூரி வில்
இற்ற பேர் ஒலி கொல் அன்று இடித்தது இங்கு? என்றான்.

பொருள் · Meaning in Tamil

வெற்றிவேல் மன்னவன் - வெற்றி பொருந்திய வேலை ஏந்திய தசரதன்; கற்றை வார் சடைமுடி - தொகுதியான நீண்ட சடை முடியையும்; கணிச்சி வானவன் - மழுப்படையையும் உடைய தேவனாகிய சிவ பெருமான்; தக்கன் வேள்வியில் - தக்கனது யாகத்தை அழித்த போது; ஏழ் உலகையும் - ஏழு உலகத்தையும், முற்றவும் வென்ற - முற்றும் வெற்றிகண்ட; மூரிவில் - வலிய வில்லானது; இற்ற - முறிந்ததனால் உண்டான; பேரொலிகொல் - பெரிய ஓசையோ; அன்று - அன்றைய தினம்; ஈங்கு இடித்தது - இங்கே இடித்தது; என்றான் - என்று வியந்து கூறினான்.

வெற்றி வேல் - உடையவனது தன்மை உடைமைப் பொருள் மேல் ஏற்றப் பெற்றது. தக்கன் வேள்விக்கு வந்த, வானுலகில் வாழும் சிறந்த தேவர்களின் வலிமைக்கும் விஞ்சியது ஆதலின் அவ் வில்லுக்கு “முற்ற ஏழுலகையும் வென்ற” என்ற அடைமொழி தந்தார்

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The king of the victorious spear said, 'At Takkaṉ's sacrifice
  2. the god with the axe, with his crown of long, thick matted locks,
  3. conquered all the seven worlds with that mighty bow;
  4. was it the great noise of its breaking that thundered here that day?'

What the poem says

Tacarataṉ now understands a mystery. On a certain day a tremendous thunder-crack was heard in Ayōttī. It must have been the sound of Civaṉ's bow breaking: the very bow with which the axe-bearing god overpowered all seven worlds at Takkaṉ's sacrifice.

The bow's sound carried all the way from Mithilā, a measure both of its might and of Irāmaṉ's.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1veṟṟivēl maṉṉavaṉ' takkaṉ vēḷviyil
kaṟṟai vār caṭai muṭik kaṇicci vāṉavaṉ
muṟṟa ēḻ ulakaiyum veṉṟa mūri vil
iṟṟa pēr olikol aṉṟu iṭittatu īṅku? eṉṟāṉ.