கம்பராமாயணம் 8091 · யுத்த 18.44

Section யுத்த காண்டம் / 18. நாகபாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வாள்களின் கவிக்குல வீரர் வார்கழல்
தாள்களைத் துணித்தனர் தலையைத் தள்ளினர்
தோள்களைப் பிரித்தனர் உடலைத் துண்டவன்
போழ்களின் புரட்டினர் நிருதர் பொங்கினார்.

பொருள் · Meaning in Tamil

நிருதர் - அரக்கர்கள்; வாள்களின் - வாள்களால்; கவிக்குல வீரர் - குரங்குக்குல வீரர்களுடைய; வார் கழல் தாள்களைத் துணித்தனர் - நீண்ட கழலணிந்த கால்களை வெட்டியும்; தலையைத் தள்ளினர் - தலைகளைத் துண்டு படுத்தும்; தோள்களைத் துணித்தனர் - தோள்களை (வெட்டி) வீழ்த்தியும்; உடலைத் துண்டவன் போழ்களின் புரட்டினர் - உடலைத் துண்டு துண்டாகும்படி பிளந்தும்; பொங்கினார் - (மிகுசினம்) பொங்க நின்றனர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With swords, of the warriors of the monkey clans the long, anklet-bound
  2. legs they hacked through; heads they sent flying;
  3. shoulders they hewed off; bodies they split into strong pieces
  4. and sent rolling: so the demons raged.

What the poem says

The demons strike back with swords, hacking off the monkey warriors' legs, heads and arms and cutting their bodies into pieces. Verses on each side alternate, and the poet keeps the slaughter evenly balanced.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vāḷkaḷiṉ kavik kula vīrar vār kaḻal
tāḷkaḷait tuṇittaṉar talaiyait taḷḷiṉar
tōḷkaḷait tuṇittaṉar uṭalait tuṇṭa vaṉ
pōḻkaḷiṉ puraṭṭiṉar nirutar poṅkiṉār.