கம்பராமாயணம் 8093 · யுத்த 18.46

Section யுத்த காண்டம் / 18. நாகபாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1சுடர் தலை நெடும் பொறி சொரியும் கண்ணன
அடர்த்தலை நெடுமரம் அற்ற கையன
உடர்த்தலை வயிரம் வேல் உருவ உய்த்தவர்
மிடற்றினைக் கடித்து உடன் விளிந்து போவன.

பொருள் · Meaning in Tamil

சுடரத்தலை நெடும் பொறி - ஒளியைத் தன்னிடம் கொண்ட பெரிய தீப்பொறிகளை; சொரியும் கண்ணன - வெளிப்படுத்தும் கண்களை உடையனவாகிய (சில குரங்குகள்); அடர்த்து அலை நெடு மரம் - (அரக்கர்களை) நெருங்கி வருத்துவதற்காகக் (கைக்கொண்ட) பெரிய மரங்கள் (தங்கிய); அற்ற கையன - கைகள் அறுபட்டு விழ; உடர்த்தலை வைரவேல் உருவ - (தங்களது) உடம்பின் கண் வலிமையான வேல் உருவிப் (பாய நின்று); உற்றவர் - (தங்களின் மேல் வேல் எறிந்து போரிட) வந்தவர்களுடைய; மிடற்றினைக் கடித்து - கழுத்தைக் கடித்து (அவர்களைக் கொன்று); உடன் விளிந்து போவன - அவர்களோடு சேர்ந்து இறந்து ஒழிந்தன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Their eyes pouring great sparks from blazing depths,
  2. their hands, which had pressed and pounded with tall trees, cut off,
  3. with strong spears driven through their bodies, of those who came at them
  4. they bit the throats, and perished together with them.

What the poem says

A picture of the monkeys' last-ditch courage. Their arms cut off and their bodies run through with spears, they still lunge at the demons who stabbed them, bite their throats and die together with their killers.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1cuṭarattalai neṭum poṟi coriyum kaṇṇaṉa
aṭarttu alai neṭu maram aṟṟa kaiyaṉa
uṭarttalai vaira vēl uruva uṟṟavar
miṭaṟṟiṉaik kaṭittu uṭaṉ viḷintu pōvaṉa.