கம்பராமாயணம் 8094 · யுத்த 18.47

Section யுத்த காண்டம் / 18. நாகபாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கரடி அடர்ந்தன - (சாம்பவானின்) கரடிப் படைகள் போர் செய்வனவாய், கிரிகளை அசனி ஏறு எனத் தொடர்ந்தன - மலைகளை அழிக்கும் இடியேறு போலத் தொடர்ந்து சென்று; மழைபொழி தும்பிக் கும்பங்கள் இடந்தன - (மதங்களை) மழை போல் சொரிகின்ற யானைகளின் மத்தகங்களைப் பிளந்து; மூளைகள் இனிதின் உண்டன - (அவற்றில் இருந்த) மூளைகளை இனிமையாக உண்டு; காதுவ பசித்தழல் கடந்தன - (தங்களை) வருத்துகின்றவையாகிய பசியாகிய தீமை ஒழிந்தன.

கரடிகள் அரக்கரோடு பொருதமை இப்பாடலில் கூறப்பட்டது. இடியினால் பெருமலைகள் அழிவது போல் கரடிகளால் அரக்கரது யானைகள் அழிந்தன என்றார் உவமையணி. இடியும் மழையும் ஒருங்கு கூறிய நயம் காண்க. கரடிகள் மூளையைத் தின்பதாகக் கூறியுள்ள பகுதி சிந்தனைக்குரியது. கொடும் புற்று அகழ்ந்து ஈரலைத் தின்பதன்றிப் பிற உயிர்களைக் கொன்று இன்னல் கரடியின் இயல்பு அன்று என்று கூறுவார் கூற்றை நினைக்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. They pressed on, pursuing like thunderbolts striking mountains,
  2. the domed brows of elephants that pour their must like rain;
  3. they tore them open, ate the brains with relish,
  4. and so put out the fire of their hunger: the fighting bears.

What the poem says

The bear troops of Cāmpavaṉ join the fight. They attack the demons' war elephants the way thunderbolts strike mountains, tear open their heads and feed on the brains. Thunder and rain sit together in the image, since the elephants are said to pour must like rain. The commentary remarks that eating brains is odd for bears, which by nature dig up anthills rather than kill other creatures.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṭarntaṉa kirikaḷai acaṉi ēṟu eṉat
toṭarntaṉa maḻai poḻi tumpik kumpaṅkaḷ
iṭantaṉa mūḷaikaḷ iṉitiṉ uṇṭaṉa
kaṭantaṉa pacit taḻal karaṭi kātuva.