கம்பராமாயணம் 8095 · யுத்த 18.48

Section யுத்த காண்டம் / 18. நாகபாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மலைகளின் பெரியன - (உருவத்திலும் வலிமையிலும்) மலைகளைக் காட்டிலும் பெரியனவாகிய குரங்குகள்; கொலை மதக்கரியன - கொல்லும் தன்மையமைந்த மும்மதங்களை உடைய யானைகளின் மேலும்; குதிரை மேலன - குதிரைகளின் மேலும்; வலமணித் தேரன - வலிமை கொண்ட மணிகள் கட்டிய தேர்களின் மேலும்; வாளின் மேலன - (அரக்கர்கள் கையில் கொண்டிருந்த) வாட்களின் மேலும்; சிலைகளின் குடுமிய - வில்களின் நுனிகளின் மீதும்; சிரத்தின் மேலன - பகை அரக்கர்களின் தலைகளின் மீதும்; வாவுவ - தாவிப் பாய்ந்து (அவற்றை) அழித்தன.

இப்பாடலில் குரங்குகள் தாவிப் பாய்ந்து அழிக்கும் தன்மை கூறப்பட்டது. குரங்குகளின் இயல்பாகிய தத்தித் தாவிப்பாய்தலைப் போரிடும் நிலையிலும் காட்டியுள்ள தன்மை காண்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Onto murderous elephants in rut, onto horses,
  2. onto strong, jewel-hung chariots, onto the swords,
  3. onto the tips of the bows, onto the heads,
  4. the monkeys, bigger than mountains, came leaping.

What the poem says

The monkeys fight in their own way. Huge as mountains, they bound from elephants to horses to chariots, onto the demons' blades and bow-tips and even onto their heads, crushing everything they land on. The poet turns their everyday leaping into a fighting style.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kolai matak kariyaṉa kutirai mēlaṉa
vala maṇit tēraṉa āḷiṉ mēlaṉa
cilaikaḷiṉ kuṭumiya cirattiṉ mēlaṉa
malaikaḷiṉ periyaṉa kuraṅku vāvuva.