கம்பராமாயணம் 8097 · யுத்த 18.50

Section யுத்த காண்டம் / 18. நாகபாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அனுமன் கை வயிரக்குன்றால் - அனுமனது கைகளாகிய வலிமை மிகு மலைகளினால்; அரைப்புண்ட அரக்கர் தானை - (தரையில்) தேய்த்து அழிக்கப்பட்ட அரக்கர் படையில்; பனி வென்ற பதாகை என்றும் - வெண்ணிறத்தால் பனியையும் வெற்றி பெற்ற பெருங்கொடி என்றும்; பல் உளைப் பரிமா என்றும் - பலவாகிய பிடரி மயிர்களை உடைய குதிரைகள் என்றும்; தனு என்றும் - விற்கள் என்றும்; வாளி என்றும் - அம்புகள் என்றும்; தண்டு என்றும் - கதைகள் என்றும்; தனிவேல் என்றும் - ஒப்பற்ற வேற்படைகள் என்றும்; சினவென்றி மதமா என்றும் - சினத்தையும் வெற்றியையும் உடைய மதங்கொண்ட யானைகள் என்றும்; தேர் என்றும் - தேர்கள் என்றும்; தெரிந்தது இல்லை - (எவையும்) தனித்தனி அடையாளம் தெரியவில்லை.

அனுமன் தன் கையில் அகப்பட்டவற்றை எல்லாம் உருத் தெரியாமல் அழித்தனன் என்பதை இப்பாடல் விளக்குகிறது. பனி வென்ற - அஞ்சுதலை வென்றுள்ள எனப் பொருள் கூறுவார் வை. மு.கோ. அனுமன் கை வயிரக்குன்று - அனுமனது கையாகிய வலிய மலை என்றும் அனுமன் கையில் கொண்ட வலிய மலை என்றும் பொருள் உரைப்பர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Banner whiter than snow, horse with flowing mane,
  2. bow, arrow, mace, peerless spear,
  3. raging, victorious elephant, chariot: none could be told apart
  4. in the demon army ground down by the diamond mountains of Aṉumaṉ's hands.

What the poem says

Aṉumaṉ crushes the demon army so completely that nothing can be identified in the wreckage: banners, horses, weapons, elephants and chariots are all pounded into one mass. "Diamond mountains" can mean his own mountain-like fists, or the hard rocks he holds in them; the commentary allows both readings.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1paṉi veṉṟa patākai eṉṟum, pal uḷaip parimā eṉṟum,
taṉu eṉṟum, vāḷi eṉṟum, taṇṭu eṉṟum, taṉi vēl eṉṟum,
ciṉa veṉṟi matamā eṉṟum, tēr eṉṟum, terintatu illai
aṉumaṉ kai vayirak kuṉṟāl araippuṇṭa arakkar tāṉai.