கம்பராமாயணம் 8103 · யுத்த 18.56
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
எறிதலோடு - (கையில் எடுத்து வீசி) எறிதலோடு; அறைதல் - மோதுதலையும்; வேட்ட இடவன் - விரும்பிய இடவன் (என்னும் குரங்குப் படைத்தலைவன்); அன்று இடந்திலாத - அன்று (அப்போரில்) வேரோடு பிடுங்கி எடுக்காமல் விட்டவை; நின்ற மரங்களில் - (உலகில்) உள்ள மரங்களில்; மறி கடல் புடைசூழ் வைப்பின் - அலைகள் மறித்து வருகிற கடலால் பக்கங்களில் சூழப்பட்ட இந்த நிலவுலகில்; மானவன் வாளி போன செறி பணை மரமே - இராமனது அம்பு ஊடுருவிச் சென்ற நெருங்கிய பெரிய மரா மரங்கள் மட்டுமே, தெரியச் செப்பும் - சிறப்பித்துச் சொல்லப்படுகிற; குறியுடை மலைகள் தம்மில் - பெயர்களை உடைய மலைகளுக்குள்ளே; கொள்ளா - (அவன்) எடுக்காதவை, குலவரைக் குலமே - குலமலைகளின் கூட்டமே.
வைப்பு - நிலவுலகம். மானவன் - மனு வழி வந்தவன். விவஸ்வாந் என்னும் பெயர் கொண்ட சூரியன் மகனாகிய மனு என்பவன் வைவஸ்வதமநு என்று கூறப்படுவான்; இவனே இராமனது குலத்து மூலமானவன் என்பர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- In this world girdled by the wave-tossed sea, of all the trees that stand
- only the close-set great sal trees pierced by the arrow of Māṉavaṉ remained; and of the mountains
- that are named and famed, only the noble range of the great clan mountains he did not take:
- these alone Iṭavaṉ, eager to hurl and to batter, did not uproot that day.
What the poem says
A boast about the monkey chief Iṭavaṉ's appetite for weapons. That day he tore up every tree on earth to throw at the enemy, sparing only the seven sal trees Irāmaṉ once shot through with a single arrow. He took every famous mountain except the sacred "clan mountains" that hold up the world. Irāmaṉ is called Māṉavaṉ, "descendant of Manu", the founder of his solar dynasty.