கம்பராமாயணம் 8104 · யுத்த 18.57

Section யுத்த காண்டம் / 18. நாகபாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வாம்பரி - தாவி ஓடிச் செல்லுகின்ற குதிரைகளையும்; மதமா - மதங்கொண்ட விலங்காகிய யானைகளையும்; மான் தேர் - குதிரைகள் பூட்டப்பட்ட தேர்களையும் உடையராய்; மானப் பாம்பினும் வெய்யோர் - சினம் மிக்க பாம்பினும் கொடியவர்களாகிய; வாள் எயிற்று அரக்கர் - ஒளி பொருந்திய பற்களை உடைய அரக்க வீரர்கள்; சாலப்படுகுவர் - மிகுதியாக இறந்து படுவார்கள்; பயம் இன்று இன்றே - (இனி நமக்கு அவர்களால் ஏற்படும்) பயம் இல்லை அல்லவா?; தூம்பு உறழ் குருதி மண்ட - மதகு வாயில் நீர் விழுதல் போல (மிகுதியான) குருதி மிகும்படியாக; தொடர் நெடு மரங்கள் சுற்றி - வரிசையாக நீண்ட மரங்களை (எடுத்துச்) சுற்றி; சாம்பவன் கொல்ல - சாம்பவான் என்னும் வீரன் கொல்வதனால்; சாம்பும் என்று கொண்டு - (இந்த அரக்கர் படை முழுதும்) இறந்து அழியும் என்ற (எண்ணம்) கொண்டு; அமரர் ஆர்த்தார் - தேவர்கள் பேரொலி செய்தார்கள்.

தூம்பு - நீர் விழும் மதகு வாயில்; மதகு வாயில் நதிநீர் வீழ்தல் போல அரக்கர் உடம்பில் குருதி மண்டப்படுகுவர் என்றார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'With their leaping horses, elephants in rut, horse-drawn chariots, the bright-fanged demons,
  2. crueller than serpents of magic, will fall in great numbers; today there is nothing left to fear!'
  3. As blood gushed out as from sluice-gates, and whirling long trees one after another
  4. Cāmpavaṉ slew, the gods roared, sure that the demon host would wither away.

What the poem says

Cāmpavaṉ, king of the bears, whirls tree after tree and kills so many demons that their blood pours out like water through the sluices of a dam. Watching from the sky, the gods cheer, sure that the demon army, which has terrorised them for so long, will soon be wiped out.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘vām pari, mata mā, māṉ tēr, vāḷ eyiṟṟu arakkar, māyap
pāmpiṉum veyyōr, cālap paṭukuvar; payam iṉṟu iṉṟē
tūmpu uṟaḻ kuruti maṇṭa, toṭar neṭu maraṅkaḷ cuṟṟic
cāmpavaṉ kolla, cāmpum eṉṟu koṇṭu amarar ārttār