கம்பராமாயணம் 8105 · யுத்த 18.58
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பொரும் குலப் புரவி ஆன திரைகளும் - போரிடுகின்ற குதிரைகளின் கூட்டமாகிய அலைகளும்; கலம் பொன் தேரும் - அழகிய தேர்களாகிய மரக்கலங்களும்; இருங்களி யானை ஆன மகரமும் - பெரிய மதக்களிப்பினை உடைய யானைகளாகிய சுறா மீன்களும்; இரியல் போக - கலங்கிப்பின்னிட; நெருங்கிய படைகள் ஆன மீன்குலம் - பல்வகைப் படைக்கலங்களாகிய பலவகை மீன்களின் கூட்டங்கள்; நெரிந்து சிந்த - கலங்கிச் சிதற; கருங்கடல் கலக்கும் மத்தின் - பாற்கடலைக் கலக்கின (மந்தரம் என்னும்) மத்துப் போல; பனசனும் கலக்கிப் புக்கான் - பனசன் என்னும் குரங்கு வீரனும் (அரக்கரது படைகளாகிய கடலைக்) கலக்கிக் கொண்டு புகுந்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As the waves that were its warring horses, the ships that were its golden chariots,
- and the sharks that were its elephants in great rut fled in confusion,
- and the shoals of fish that were its crowded weapons were crushed and scattered,
- Paṉacaṉ too, like the churning-pole that churns the dark sea, plunged in, churning.
What the poem says
An extended metaphor. The demon army is an ocean: its horses are waves, its chariots ships, its elephants sharks and its weapons shoals of fish. The monkey warrior Paṉacaṉ plunges into it and stirs it up like Mount Mantaram, which the gods and demons used as a churning-pole to churn the ocean of milk.