கம்பராமாயணம் 8106 · யுத்த 18.59

Section யுத்த காண்டம் / 18. நாகபாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மயிந்தனும் துமிந்தன் தானும் - மயிந்தனும் (அவன் தம்பியாகிய) துமிந்தன் என்பவனும், மழைக்குலம் கிழித்து - மேகக் கூட்டங்களைக் கிழித்துக்கொண்டு; வானத்து உயர்ந்து எழும் - வானத்தை நோக்கி உயர்ந்து எழுகின்ற; எருவை வேந்தர் உடன் பிறந்தவரை ஒத்தார் - கழுகுகளுக்கு அரசர்களாகிய உடன் பிறந்த சம்பாதி சடாயு ஆகியோரை ஒத்துத் தோன்றினார்கள்; கவயன் - கவயன் என்னும் வானர வீரன்; கயங்குடைந்தாடும் வீரக் களிறொத்தான் - குளத்தில் மூழ்கிக் கலக்கி விளையாடுகிற வீரத்தன்மை உடைய ஆண் யானையை ஒத்து விளங்கினான்; கேசரி - கேசரி என்னும் பெயருடைய குரங்கு வீரன்; உற்றது அல்லால் காலின் பெயர்ந்திலன் - (ஓரிடத்து நிலைத்து இருத்தலல்லாமல்) அடி பெயர்த்துப் பின் வாங்குதல் இல்லாமல்; பெரும் போர் பெற்றான் - (உறுதியாக நின்று) பெரிய போரைச் செய்தான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Mayintaṉ and Tumintaṉ, ripping through the banks of cloud
  2. and soaring into the sky, were like the brother kings of the vultures;
  3. Kavayaṉ was like a mighty bull elephant that plunges and sports in a pool;
  4. Kēcari never moved his feet from where he stood, and fought a mighty battle.

What the poem says

Four more monkey heroes. The brothers Mayintaṉ and Tumintaṉ fly up through the clouds to attack, like the vulture-king brothers Campāti and Caṭāyu. Kavayaṉ churns the enemy ranks like an elephant splashing in a pond. Kēcari, Aṉumaṉ's father in some traditions, holds his position and never takes a step back.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1mayintaṉum tumintaṉ tāṉum, maḻaik kulam kiḻittu, vāṉattu
uyarntu eḻum eruvai vēntar uṭaṉ piṟantavarai ottār;
kayam kuṭaintu āṭum vīrak kaḷiṟu ottāṉ, kavayaṉ; kāliṉ
peyarntilaṉ, uṟṟatu allāl, kēcari perum pōr peṟṟāṉ.