கம்பராமாயணம் 8107 · யுத்த 18.60
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பெரும் படைத்தலைவர் யாரும் பெயர்ந்திலர் - (குரங்குப்) பெரும் படைத்தலைவர்கள் எல்லாரும் சலித்துப் பின்வாங்காதவர்களாய்; வரம்பு இல - எல்லை இல்லாத; பிணத்தின் குப்பை - பிணக்குவியல்களை; பரப்பி ஆர்த்து மலைகின்ற பொழுதின் - குவியும்படி பேரொலி செய்து போர் செய்கின்ற பொழுது; இரிந்தன கவியும் - தோற்று ஓடிய குரங்குகளும்; வந்துற்று - (மன வலிமை பெற்று) மீண்டும் வந்து; கூடி எடுத்தன - உடன் கூடிப் போர் செய்யத் தொடங்கின; எடுத்தலோடும் - போர் செய்யத் தொடங்கிய பொழுது; நிருதர் தானை சரிந்தது - அரக்கர் படை கலங்கி நிலை தளர்ந்தது; அரக்கன் - (அதுகண்டு) அரக்கனாகிய இந்திரசித்தன்; தானே தாக்கினன் - தான் மட்டும் (தனி ஒருவனாக நின்ற) (வானரப் படைகளைத்) தாக்கினான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- None of the great commanders gave ground; as they fought on, roaring,
- spreading heaps of corpses beyond all bounds, the monkeys who had fled
- came back, joined them and rose to the fight; and with that rising
- the demon army gave way; then the demon prince attacked, alone.
What the poem says
Since the monkey generals stand firm, the troops who had fled take heart and return to the fight, and now the demon army begins to crumble. Seeing his forces collapse, Intiracittaṉ attacks the whole monkey host by himself.