கம்பராமாயணம் 8108 · யுத்த 18.61
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
மிடல் வலோன் - வலிமை மிக்கவனாகிய (இந்திரசித்தன்); பூண் எறிந்த குவடு அனைய - அணிகலங்கள் (பூட்டப்பட்டு) ஒளி வெளிக்காலுகிற மலையை ஒத்த; தோள்கள் - (தன் இரு) தோள்களும்; இருபுடை பரந்து உயர - (போர் கண்டு பூரித்து) இரு பக்கங்களிலும் பரவி உயரவும்; அடல் வலித் தூண் எறிந்தனைய விரல்கள் - அழிக்கும் வலிமையுள்ள தூண்கள் பொருந்தியது போல் அமைந்த கை விரல்கள்; கோதையொடு சுவடு எறிந்தது ஒரு தொழில்பட - விரற்செறி (அணிந்து) தழும்பு படுதல் ஆகிய ஒரு தொழிலைச் செய்யவும்; சேண் எறிந்து நிமிர் திசைகளோடு மலை - நீண்ட தூரம் பரவிப் பரந்த திசைகளும் மலைகளும்; செவிடு எறிந்து உடைய - செவிடு படும் (ஓசையை) எழுப்பித் துண்டு துண்டாக; நாண் எறிந்து - வில்லினது நாணைக் கையால் தெறித்து; முறை முறை தொடர்ந்து - (அந்த ஒலி) வரிசை வரிசையாகப் பரவும் படி செய்து; கடல் உலகம் யாவையும் நடுக்கினான் - கடலால் சூழப்பட்ட உலகம் முழுவதையும் நடுங்கும்படி செய்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- His shoulders, like peaks flashing with ornaments, swelled broad and high on either side;
- his fingers, like mighty pillars of strength, did their one task that leaves the finger-guard's scar;
- the strong one, so that the far-flung directions and the mountains were deafened and shattered,
- twanged his bowstring again and again, and set the whole sea-girt world trembling.
What the poem says
Intiracittaṉ goes into action. His jewelled shoulders swell with battle joy, and his pillar-like fingers, scarred by the archer's finger-guard, pluck the bowstring over and over. The twang is so loud it deafens the directions, cracks the mountains and makes the whole earth shake.