கம்பராமாயணம் 8110 · யுத்த 18.63

Section யுத்த காண்டம் / 18. நாகபாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1சுற்றும் வந்து, கவிவீரர் வீசிய சுடர்த் தடங்கல் வரை, தொல்மரம்
இற்று எறிந்து பொடியாய் உதிர்ந்தன; எழுந்து சேணிடை இழிந்தபோல்
வெற்றி வெங்கணை படப் படத் தலைகள் விண்ணினூடு திசைமீது போய்
அற்று எழுந்தன விழுந்து, மண்ணிடை அழுந்து கின்றன அனந்தமால்.

பொருள் · Meaning in Tamil

வெற்றி வெங்கணைகள் படப்பட - (இந்திரசித்தன் எய்த) வெற்றி பொருந்திய கொடிய அம்புகள் மேலும் மேலும் படுதலால், கவி வீரர் - வானர வீரர்கள்; சுற்றும் வந்து வீசிய - (இந்திரசித்தனைச்) சூழ்ந்து சுற்றிக்கொண்டு (அவன் மேல்) வீசிய; சுடர்த் தடங்கல் வரை - ஒளி உடைய கல்லால் ஆகிய மலைகளும்; தொல் மரம் - (பழைய) பெரிய மரங்களும்; இற்று ஒடிந்து பொடியாய் உதிர்ந்தன - முறிந்து போய்ப் பொடிப் பொடியாய்ச் சிந்தின; தலைகள் - (அறுபட்டு மேல் எழுந்த வானர வீரர்களது) தலைகள்; விண்ணினூடு எழுந்து - சேணிடை இழிந்த போல் (பறவைகள்) ஆகாயத்தில் நெடுந்தூரம் மேல் எழுந்து (அங்கிருந்து) கீழிறங்குவன போல; திசை மீது போய் - (பல) திசைகளிலும் சென்று; அற்று விழுந்து எழுந்தன - துண்டு பட்டு விழுந்து சிதறி எழுந்தனவாய்; மண்ணிடை அழுந்துகின்றன - நிலத்தில் புதைந்து போனவை; அனந்தமால் - எண்ணிக்கையில் அடங்காதவை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The blazing great rocks, the mountains, the ancient trees that the monkey warriors, circling round, had hurled
  2. broke, snapped, and fell as dust; and like birds that rise far into the sky and swoop down,
  3. as the victorious, cruel arrows struck and struck again, heads flew through the sky to every quarter,
  4. severed, flew up, fell, and sank into the earth, beyond all number.

What the poem says

The monkeys surround Intiracittaṉ and pelt him with rocks, hills and trees, but his arrows smash everything to dust in mid-air. Then the arrows find the monkeys themselves. Their severed heads fly up into the sky like birds, scatter in every direction and fall back into the earth, too many to count.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1cuṟṟum vantu, kavi vīrar vīciya cuṭart taṭaṅ kal varai, tol maram
iṟṟu oṭintu poṭiyāy utirntaṉa; eḻuntu cēṇiṭai iḻintapōl
veṟṟi veṅ kaṇai paṭap paṭat talaikaḷ viṇṇiṉūṭu ticaimītu pōy
aṟṟu eḻuntaṉa viḻuntu, maṇṇiṭai aḻuntukiṉṟaṉa aṉantamāl.