கம்பராமாயணம் 8111 · யுத்த 18.64
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
சிலைத்தடம் பொழி வயக்கடும் பகழி செல்ல ஒல்கினர் - (சில குரங்கு வீரர்கள்), இந்திரசித்தனின் வில்லில் இருந்து எய்யப்பட்ட கொடிய விரைவான அம்புகள் (தங்கள்) மேல் படுதலால் தளர்ந்தவர்களாகி; சினத்தினால் - (அவன் மீது கொண்ட) சினத்தினால்; உலைத்து எறிந்திட - வீசி எறிந்திடுவதற்காக; எடுத்த குன்று தொறு - (கையில்) எடுத்த மலைகள் தோறும்; உடல் பரங்கள் கொடு ஒதுங்கினார் - தங்கள் உடம்பின் பாரத்தைச் சுருக்கிக் கொண்டு (தளர்ச்சி நீங்க) ஒதுங்கி நின்றனர்; நிலைத்து நின்று - (அவ்வாறு ஒதுங்கி) நிலைபெற்று நின்று; சினம் முந்து செல்ல - சினம் தங்களை இழுத்துக்கொண்டு முன்னே செல்லுதலால்; எதிர்சென்று சென்று உற நெருக்கலால் - எதிரில் போய்ப் போய் மிக நெருங்குவதால்; மலைத் தடங்களொடு - (அவர்கள் கையில் ஏந்திய) மலைகளுடன்; உரத்தலம் கழல - (அவற்றில் மறைந்து கொண்டுள்ள அவர்களது) மார்பில் பட்டு வெளிப்படுமாறு; பல வாளியே - பல அம்புகள்; ஊடு சென்ற - ஊடுருவிச் சென்றன.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As the swift, cruel arrows rained from his great bow, they faltered; and behind each hill
- they had lifted to hurl in their anger they drew in their bodies' bulk and sheltered;
- then, standing firm, as anger drove them forward, advancing again and again and pressing close,
- many arrows went clean through the mountains and out through their chests.
What the poem says
Wounded monkeys crouch behind the hills they are carrying, using them as shields. But anger drives them forward again, and as they close in, Intiracittaṉ's arrows pierce straight through the mountains and out through the chests of the monkeys behind them.