கம்பராமாயணம் 8112 · யுத்த 18.65
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
முழுத்தம் ஒன்றில் - (இரண்டு நாழிகை கொண்ட) ஒரு முகூர்த்த காலத்தில்; ஒரு வெள்ள வானரம் - ஒரு வெள்ளம் எனும் அளவு கொண்ட வானரப் படைகள்; முடிந்து - (தங்கள்) ஆயுள் முடிந்து; தடிந்து போய் மாள்வன - துணிபட்டுப் போய் இறந்து படுவனவாக; கழுத்த - கழுத்தை உடையனவும்; கைய - கைகளை உடையனவும், நிமிர் கால - நீண்ட கால்களை உடையனவும்; வால - வாலினை உடையனவும்; பல கண்ட மானபடி நேர் கண்டு - (ஆகிய பல வானரங்கள்) பல துண்டுகளாகிப் போனதை நேரிடையாகக் கண்டு; எழுத்தொடர்ந்த படர் தோள்களால் - இரும்புத் தூண் போன்று அகன்ற பெரிய தோள்களினால்; எறிய எற்ற மேல் எழுந்து - (அவ்விந்திரசித்தனை) எறிவதற்கும் மோதுவதற்கும் வானத்தில் (பாய்ந்து) எழுந்து சென்று; விழுத்த பைந்தலைய - (அவன் செலுத்திய அம்புகளினால்) தள்ளப்பட்ட பசுமையான தலைகளை உடையனவாய்; வேணுமால் வரைகள் வீசி வீசி - மூங்கில்கள் வளர்ந்த பெரிய மலைகளை வீசி வீசி; அற்றன உடன் வீழுமால் - (தலைகளும் மலைகளும்) அழியத் (தாமும்) ஒருசேர விழுவனவாயின.
ஆங்கிலம் · English translationAI
Translation
- In a single muhūrta a whole veḷḷam of monkeys perished, hewn down;
- seeing them lie in pieces, necks, arms, long legs, tails, the others
- leapt up to hurl and to strike with broad shoulders like iron bars, and were cut off;
- their fresh heads struck down, still hurling and hurling great bamboo-clad mountains, they fell along with them.
What the poem says
In a single muhūrta, a span of about forty-eight minutes, Intiracittaṉ destroys a whole veḷḷam of monkeys, a vast army unit. The survivors see their comrades hacked into pieces and leap into the air hurling bamboo-covered mountains at him. They too are beheaded, and they fall to earth together with the mountains they were throwing.