கம்பராமாயணம் 8114 · யுத்த 18.67

Section யுத்த காண்டம் / 18. நாகபாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1விழிக்குமேல் விழிய, நிற்கின் மார்பிடைய மீளுமேல் முதுக, மேனிய
கழிக்குமேல், உயர ஓடுமேல் நெடிய கால, வீசின் நிமிர்கைய, வாய்த்
தெழிக்குமேல் அகவும் நாவ, சிந்தையின் உன்னுமேல் சிகரம் யாவையும்
பழிக்கும் மேனிய குரக்கின்மேல், அவன் விடும்கொடும் பகழி பாயுமே.

பொருள் · Meaning in Tamil

சிகரம் யாவையும் - மலைகள் எல்லாவற்றையும்; பழிக்கும் மேனிய குரங்கின் மேல் - (தமக்கு ஒப்பாக என்று) பழிக்கத்தக்க வலியும் பெரிய தன்மையும் உடைய) உடம்புகளையும் உடைய குரங்குகளின் மீது; அவன் விடும் கொடும் பகழி பாயவே - அந்த இந்திரசித்தன் செலுத்திய கொடுமையான அம்புகள் பாயும் போது; விழிக்குமேல் விழிய - (அவ்வானரங்கள் கண்) விழித்துப் பார்த்தால் (அந்த) விழிகளின் மீதும்; நிற்கின் மார்பிடைய - (எதிர்த்து) நின்றால் மார்புகளின் மீதும்; மீளுமேல் முதுக - புறங்காட்டி ஓடுமானால் முதுகுகளின் மீதும்; கழிக்குமேல் மேனிய - விலகித் தப்ப முயலுமாயின் உடம்புகளின் மீதும்; உயர ஓடுமேல் நெடிய கால - உயரக் (குதித்துத் தப்பி) ஓடுமானால் நீண்ட கால்களின் மீதும்; வீசின் நிமிர்கைய - கைகளை வீசுமாயின் உயர்ந்த கைகளின் மீதும்; வாய்த்தெழிக்குமேல் அகவும் நாவ - வாயினால் அதட்டும் என்றால் அசைகின்ற நாக்குகளிலும்; சிந்தையில் உன்னுமேல் - மனத்தினால் நினைக்குமாயின் (அந்த மனத்தின் மீதும்) அந்த அம்புகள் செல்லுகின்றனவாயின.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. If they looked, on their eyes; if they stood, on their chests; if they turned back, on their backs; on their bodies
  2. if they dodged; if they leapt upward, on their long legs; if they swung, on their raised arms; if their mouths
  3. shouted, on their quivering tongues; if they so much as thought in their minds, there too:
  4. so the cruel arrows he loosed fell upon the monkeys whose bodies put every mountain peak to shame.

What the poem says

A tour de force of rhetoric. Whatever the monkeys do, an arrow finds the part of the body doing it: open eyes, a chest turned to face him, a back turned to flee, legs in a leap, arms in a swing, a tongue in a shout. Even a thought in the mind is hit. The verse captures Intiracittaṉ's uncanny skill.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1viḻikkumēl viḻiya, niṟkiṉ mārpiṭaiya mīḷumēl mutuka, mēṉiya
kaḻikkumēl, uyara ōṭumēl neṭiya kāla, vīciṉ nimir kaiya, vāyt
teḻikkumēl akavum nāva, cintaiyiṉ uṉṉumēl cikaram yāvaiyum
paḻikkum mēṉiya kuraṅkiṉmēl, avaṉ viṭum koṭum pakaḻi pāyavē.