கம்பராமாயணம் 8116 · யுத்த 18.69
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கண்ட அனந்த கோடி வானரம் - (தன்) (கண்ணின் முன் எதிர்ப்பட்டுக்) கண்ட பல கோடி வானர வீரர்கள்; முறை கண்டமான படி கண்ட - முறையே (பல) துண்டங்களானதைக் கண்ட; அக்கண்டன் - (அந்த) முள் போன்று கொடியவனாகிய இந்திரசித்தன்; மாறு ஒருவர் இன்மை கண்டு - தன்னை (எதிர்க்க வேறு) ஒருவரும் இல்லாமையைப் பார்த்து; கணை மாறினான் - அம்புகளைச் செலுத்துதலை நிறுத்தினான்; விடுதல் இன்மையாய்க் கண்ட காலையில் - (அவன் அவ்வாறு) அம்பு விடுதல் இல்லாது நின்ற தன்மையைக் கண்ட அளவிலே; விலங்கினான் இரவி காதல் - (வெகு தூரத்தில்) விலகி நின்றிருந்தவனாகிய சூரியன் மகனாகிய சுக்கிரீவன்; காதுவது ஓர் காதலால் - (அவனோடு எதிர்த்துப்) போரிட வேண்டும் என்ற விருப்பத்தால்; கண்ட கார் சிதைய - (வானத்தில்) காணப்படுகிற மேகங்கள் சிதையும்படி, மீது உயர்ந்து ஒளிர் மராமரம் - மேல் உயர்ந்து ஒளிவிளங்குகிற மராமரத்தைப் (பிடுங்கி எடுத்து); சுலவு கையினான் - சுற்றுகின்ற கையை உடையவனாயினான்; (அடுத்த பாடலிலும் தொடரும்)
ஆங்கிலம் · English translationAI
Translation
- Seeing countless crores of the monkeys before him cut into pieces, one after another,
- that thorn of a man, finding no one left to oppose him, held back his arrows; and when he saw him
- no longer shooting, the son of the Sun, who had stood apart, in his longing to fight,
- whirled in his hand a gleaming sal tree soaring high enough to shatter the clouds above.
What the poem says
The Tamil verse plays on the syllables kaṇṭa in every line: kaṇṭa, "seen", and kaṇṭam, "pieces". Having cut down countless monkeys, Intiracittaṉ, called "the thorn", finds no one left to face him and stops shooting. Cukkirīvaṉ, who had been fighting elsewhere, sees the pause, tears up a towering sal tree and swings it as he comes on. The sentence continues into the next verse.