கம்பராமாயணம் 8117 · யுத்த 18.70

Section யுத்த காண்டம் / 18. நாகபாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1உடைந்து, தன்படை உலைந்து சிந்தி, உயிர் ஒல்க, வெல்செரு உடற்றலால்,
கடைந்து தெள் அமுது கொள்ளும் வண்ணம் என மேல்நிமிர்ந்தது ஓர் கடுப்பினான்
இடைந்து சென்றவனை எய்தி, எய்த அரிய காவல்பெற்று இகல் இயற்றுவான்
மிடைந்து நின்ற படை வேலை கால்தளர வீசினான்; நிருதர் கூசினார்.

பொருள் · Meaning in Tamil

தன் படை உடைந்து உலைந்து சிந்தி - தனது (குரங்குப்) படைவலிமை கெட்டு வருந்திச் சிதறி; உயிர் ஒல்க - உயிர் விடும் படியாக; வெல் செரு உடற்றலால் - (இந்திரசித்தன்) வெல்லும் போரினைச் செய்தலால்; கடைந்து - (திருப்பாற்கடலைக்) கடைந்து; தெள்ளமுது கொள்ளும் - தெளிந்த அமிழ்தத்தைப் பெற்ற; வள்ளல் என - வள்ளல்தன்மை உடைய வாலி போல்; மேல் நிமிர்ந்தது ஒர் கறுப்பினான் - மேலும் மேலும் பொங்குகின்ற ஒப்பற்ற சினத்தினை உடையவனாய்; இடைந்து சென்றவனை எய்தி - (போரை நிறுத்தி) விலகிச் சென்றவனாகிய இந்திர சித்தனை நெருங்கி; எய்த அரிய காவல் பெற்று இகல் இயற்றுவான் - (மற்றவர்) நெருங்குவதற்கு முடியாத காவலாகப் பொருந்தப் பெற்றுப் போரினை இயற்றுவதற்காக; மிடைந்து நின்ற படை வேலை கால் தளர - நெருங்கி நின்ற அரக்கர் படையாகிய கடல் நிலைகுலையும் படியாக; வீசினான் - (அந்த மராமரத்தை) வீசிப் போர் செய்தான்; நிருதர் கூசினார் - (அது கண்டு) அரக்கர்கள் கூச்சம் அடைந்தார்கள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As his army broke, crushed and scattered, lives failing, because the other was winning the fight,
  2. he, with a rage that rose like that of the generous one who churned the sea and took the clear nectar,
  3. came upon the one who had drawn aside, and to fight with a guard no one could get past,
  4. swung the tree so that the sea of the massed army lost its footing; the demons cringed.

What the poem says

Enraged by the destruction of his army, Cukkirīvaṉ swells with anger like his brother Vālī, who, as the commentary notes, once helped churn the ocean of milk for the nectar of the gods. He reaches Intiracittaṉ and swings the great tree at the demon troops around him, scattering them so that no one can get between him and his opponent. The demons shrink back.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1uṭaintu, taṉ paṭai ulaintu cinti, uyir olka, vel ceru uṭaṟṟalāl,
kaṭaintu teḷ amutu koḷḷum vaḷḷal eṉa mēl nimirntatu ōr kaṟuppiṉāṉ
iṭaintu ceṉṟavaṉai eyti, eyta ariya kāval peṟṟu ikal iyaṟṟuvāṉ
miṭaintu niṉṟa paṭai vēlai kāl taḷara vīciṉāṉ; nirutar kūciṉār.